மௌனங்களெல்லாம்
சம்மதமாகிடின்
வலியின் மொழிதானெது?

மௌனம்
தவிர்ப்பின் தவிப்பு!

மௌனம்
எரிச்சலின் மெல்லிசை!

மௌனம்
வார்த்தைகளின் வடிகட்டி!

மௌனம்
வாதையின் பாஷை!

- இசைமலர்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.