காம்பு கழன்று
தரையிறங்கிய பூவிற்கு
செடியின் வாசம்.

***

அந்திக்கருக்கலில்
வந்தமரும்
பறவைக்காக காத்திருந்து
இரவு முழுவதும்
பறவையின் கவிதை கேட்டு
ஆனந்தப்பெருக்கில் ஆழ்ந்து
தூங்கியெழுந்து
பறக்கிறது நான்கு திசையிலும்
கிளை பரப்பிய மரம்.

***

அழகான வெயில்
அழகான மழை
நனைந்து கொண்டுதான்
இருக்கிறது எல்லாமும்.

- ப.தனஞ்ஜெயன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.