அணுக்கமானவரின்
மரணத்தால் தோன்றும்
வெற்றிடத்தின் அழுத்தத்தில்
இதயம் சிந்தும்
குருதியின் வெம்மையில்
மனதின் வன்மெல்லிய
தன்முனைப்புத் திரை கரைய..
துலங்குகிறது
அகங்கார வஞ்சகங்களின்
பொருளின்மை..

அழுக்குகளைக்
கரைத்த கோடைமழை
நின்றவுடனேயே
படியத் தொடங்குகின்றன...
பச்சிளங் குழவியெனத் துலங்கும் ம(ன)ர இலைகளில்
கோடைப் புழுதிகள்

- கா.சிவா

Pin It