இடுப்பு எலும்பில்
ஓராயிரம் யானைகள் மிதிக்கும்
மாதவிடாய் வலியோடு
மயக்கமும் மன எரிச்சலும்
பிசுபிசுக்கும் பொழுதுகளில்
தனிமையில் வலிகளோடு
சாலையோரம் படுத்துக் கிடக்கும்
இரவின் விழிகளை
குத்திக் குதறும் மின்விளக்குகள்
பொங்கும் முதல் சாமத்தில்
இறுக்கமான ஆடைகளில்
உருக்கமான உருகிடும் கனவுகளில்
தகவல் தொழில்நுட்பப் பூங்காவில்
விடிய விடிய கண்விழித்து
களிப்புடன் முகம்தெரியா அகங்களுடன் சிரித்துப் பேசி
விடியாமலே விடிவதற்குள்
வீடு வந்துசேரும் எல்லா ராத்திரியும்
அவளுக்கு
சிவராத்திரிதான் எம்பாவாய் ..!

- சதீஷ் குமரன்

Pin It