பூமியின் சுற்று
வட்டப்பாதையில்
நிலைநிறுத்தப்பட்டது
செயற்கைக் கோள்
விண்வெளியில்
21 ஆம் நூற்றாண்டில்
நாங்களும்
சுற்றுவட்டப்பாதையில் தான்
செல்கிறோம்
ஊரைச்சுற்றி எங்களின்
பிணங்களை சுமந்து கொண்டு
மண்வெளியில்..!

- சதீஷ் குமரன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.