நன்றாகத் தெரியும்
பாதி இருட்டை
பயன்படுத்திக் கொண்டாள்

நேற்றுவரை யோசித்தாளா
என்று எனக்குத் தெரியாது
இன்று கூட யோசித்திருக்கலாம்

திட்டமிட்டு திறந்து வைத்திருக்கிறாள்
காட்டிக் கொடுத்தது
கைகூப்பிய ஜன்னல்

கண் பொத்தி மனம் பொத்தி
எனக்கு அத்தனை
கெட்டியில்லை மூளை

கவிழ்ந்து விட துடிக்கும்
கப்பலை துருத்திக்
கொண்டலையும்
கள்ள மௌனம் எனக்குண்டு

தாகத்தோடு அலையும்
கடலுக்கும் கரைக்கும்
இடையே
அவள் கோடு போட்டாள்

ரோடு போட நா தொங்கும்
ஊமை பூதம் என்னில்
இருக்கிறது

பாதி அவிழ்த்துக் கொண்டு
நிற்கையிலாவது அவளுக்கு
உறுத்தியிருக்க வேண்டும்

மீதியை உருவிக் கொண்டு
நெருங்கிய எனக்காவது
தெரிந்திருக்க வேண்டும்
நான் கடவுள் என்று....!

- கவிஜி

Pin It