ஊர்ப் பக்கம் போயி
வருஷமாகிடுச்சு
வாட்சப் வசதி இருந்தாலும்
முகம் பார்த்துப் பேச
வார்த்தை இல்லை
பெரிய மயிராட்டம் விட்ட
சவால் மேன்ஷன் டாய்லெட்ல
முக்கி முனங்குது
கார்ல் மார்க்ஸ்ம் காப்காவும்
ஏட்டுச்சுவடி கறிக்குதவாது
போலத்தான் போல
வர்றவன் போறவன்ட்டெல்லாம்
வாய் கிழிய கதை சொல்லி
நான் தூங்கவும் நானே
முனங்க வேண்டியிருக்கு
தாடில நரைச்ச முடி
நாலைஞ்சு வந்தாச்சு
ஆனா செத்துப் போகவும்
இது வயசில்ல
நந்தவனம் நார் நாரா
கிழிஞ்ச கனவு கடைசிவரை
முடியவேயில்ல
என்ன புலம்பி என்னானாலும்
இந்த பொங்கலுக்கு எப்டியாது
ஊருக்குப் போகணும்
நிலா காயும் நியந்தா வீட்டு
கிணத்து மேட்டுல வாய் விட்டு அழணும்...!

- கவிஜி

Pin It