ஒரு இரவு பகலாவதற்கு
என்ன தேவையோ
அது என்னிடம் இருக்கிறது..
ஒரு அகிம்சை வன்முறையாவதற்கு
எது வேண்டுமோ
அதுவும் என்னிடமிருக்கிறது..
ஒரு தோல்வி வெற்றியாவதற்கு
எது காரணமோ
அதுகூட இருக்கிறது
ஒரு மனிதன் மிருகமாவதற்கு
என்ன தூண்டலோ
அதுவும் இருக்கிறது..
ஒன்றை இன்னொன்றாக்க
இன்னொன்றை மறுபடியும் அந்தவொன்றாக
மீட்பதற்கான காரணமும் அவசியமும் தான்
என்னிடம் இல்லை....

- வாசகன் வெங்கடேசன்

Pin It