முடிக்கும் முகத்துக்கும்
சாயம் தேய்த்து தொலைத்துவிட்டு
உறுப்பையும் உடலையும்
உதாசீனம் செய்துவிட்டு
உலக விசயம் பேச
ஆண்ட்ராய்டிலும் கம்ப்யூட்டரிலும்
காசைத் தொலைத்து நிற்கும்
கஞ்சிக்கு செத்த பய….

அரிதாரம் பூசிக்கொண்ட காற்று

வாகனப் புகையில்
அரிதாரம் பூசிக்கொண்ட
கருப்பு நிறக்காற்று
சுவாசப் பைக்குள் புகுந்து
வேண்டியபடி வண்ணம் பூசி
ஸ்ட்ரெய்ட்டாய்
புதை குழிக்குப் போக
ஆன்லைனில்
அட்வான்ஸ் புக்கிங்
ஆரம்பம்.

- வே.சங்கர்

Pin It