நெடுநேரமாய் 

சூரியனின் கிரணங்கள் 

சறுக்கி விளையாடிய 

நிழற்குடை ஒன்று 

அந்தியில் வாசம் செய்கிற 

கல்லூரிப் பெண்களினால் 

தணிந்திருந்தது....

 

நிறைந்திருந்த அப்பெண்களின் 

கேளிக்கையும் 

சிரிப்பொலியும்

கொட்டிய அதிர்வலைகளில் 

திடீரென முளைத்திருக்கக்கூடும் 

தார்ச்சாலையின் மீதொரு 

வேகத்தடை...

- பாலச்சந்தர்(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Pin It