இரைதேடிச் சென்ற
பறவைகள்
இருட்டியபின் தான்
கூடடைகின்றன..
ஆசையாய்
வாய் பிளக்கும்
குஞ்சுகளின் மேல்
அலட்சியமாய்
விழுகின்றன
புழுவின் துண்டுகள்..
கொஞ்சிக் குலாவ
பொழுதின்றி
அடுத்த நாளின்
தேடலுக்காக
ஆயத்தம் ஆகின்றன
வராத உறக்கத்தை
வருந்த அழைத்து...
இப்போதெல்லாம்
கூடடைதலில்
எந்த குதூகலமும்
இருப்பதில்லை....

- அருணா சுப்ரமணியன்

Pin It