பழைய வீடு தான் 
பாழடைந்ததாக 
காரணம் காட்டி 
ஒழித்ததென்னவோ 
பரண்மேலுள்ள 
இறந்த தாத்தாவின் 
நசுங்கிய குவளைகள் 

ஓரங்கட்டப்பட்ட
தென்னவோ 
இருக்கும் பாட்டியின் 
குவளைக்குள் 
நசுக்கிய நினைவுகள் 

துந்தடைந்த
தென்னவோ 
பின்புற கிணறு 
தூர்வாரியதென்னவோ 
தெருவோர 
திண்ணையையும்  
துணைக்கிருந்த  
தென்னையும் 

முடிந்தளவு 
ஒழித்ததில் 
ஒழிக்கபட்டிருந்தது 
ஓரங்கட்டப்பட்டிருந்த  
பாட்டியும் ! 

இறுதியாக 
ஏதோவொரு 
மூலையில் 
தொங்கிக்
கொண்டிருக்கிறது 
தானும் 
துரத்தப்படுவோம் 
என்றறியாத 
குருவிகூடும் 
தேன்கூடும்.......

Pin It