தானம் கொடுக்க
முன் கை நீண்டதும்
செல்பி எடுக்க
முழங்கையும்
நீண்டு விடுகிறது
தன்னிச்சையாக

நவீன கர்ணர்கள்......

------

ஒவ்வொரு வருடமும்
தவறாமல்
கரைந்துவிடுகிறார்
களிமண் பிள்ளையார்

கஷ்டங்கள் மட்டும்
கரையாமல்
அப்படியே பிடித்து வைத்த பிள்ளையாரைப்போல...

- மு.கௌந்தி

Pin It