நான் தெளிந்த நீரோடை
யார் வேண்டுமானாலும்
குழப்பிப் போகலாம்

*****

lady250வாணலியில் புரண்டு
வெந்து கொண்டிருக்கிறது
நாற்பதைக் கடந்தவளின்
பழுப்பு முத்தம்......

*****

நீ கலைத்துச் செல்ல
நான் என்றோ கட்டிய மணல் வீட்டை
இன்றும் யாரோ
கலைத்துக் கொண்டுதானிருக்கிறார்கள்.....

*****

மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த போதும்
மரிக்கத் தோன்றியது
எதிரே ஒரு மனிதனும் இல்லை

*****

புகைப்படத்தில் சிரித்துக் கொண்டே
இருந்தாய்
போட்டு உடைத்து சில்சில்லாக்கியபோது
அழத் தோன்றியது எனக்கு...

*****

இந்த இலைகள்
கொடூரமானவைகள்
இளைப்பாறுபவள் மீது
விழுகின்றன...

*****

வரைந்தவனுக்குக் கொடுத்து
வைக்கவில்லை
பார்த்துக் கொண்டிருந்த எனக்கு
காதல் வந்தது

- கவிஜி

Pin It