பிரியங்களை நிரப்பி
குத்தீட்டியென
பாயும் பார்வையைத் தாங்காது கவிழ்ந்து
கொண்டன இமைகள்
உதிர்ந்து கொண்டிருக்கிற
மாலைப் பொழுதில்
தூரத்தில் பொழியும் மழையைச்
சுமந்து வரும் வளியின் ஈரம்
தொட்டுப் போகும் நொடிகளில்
வரைவின் நீட்டிப்பை
முறித்துக் கொண்ட நாக்குகள்
தழுவிக் கொண்டிருப்பதைப் பார்த்து
நகைத்து முகந்திருப்பிய
கனகாம்பரப் பூ
வெட்கத்தில் சிவந்திருந்தது

- சிவ விஜயபாரதி

Pin It