என் வாழ்வில் மிக மிக
வன்மையான ஒரு பெண்ணைக்
கடந்திருக்கிறேன்.
அவள் அப்படியொரு
தீர்க்கத்தில்தான் என்னை
மென்மையாக்கினாள்.
நிலவைப் புரட்டிப்
போடும் சாகச நாட்களை
அவளே வடிகட்டி
அனுப்பியிருந்தாள் என
நினைக்கும் போது
இரவுக்குள் வரைவதை நிறுத்திக்
கொண்டேன்.
இப்போதெல்லாம்
இரவையே வரைகிறேன்...
இன்னும் ஒரு பொருட்டென
இருந்து விட்டுதான் போகட்டுமே
மெல்லிய கீறலென
வதை செய்து விட்டு நின்ற
பெருஞ்சிரிப்பின் பின் படலம்...
ஆகச் சிறந்தவையே
எனைக் கடக்க முடியும்.
அவள் அப்படியொரு
கடந்த காலம்...
நான்
கரம் பற்றவும் இல்லை
கை விடவும் இல்லை
காதலிக்கிறேன் அவ்வளவே...

- கவிஜி

Pin It