யாருக்காகவோ என
இருந்துவிட்டுப் போகட்டும்
மெல்லக்கசியும் அந்த
ஒற்றைப் புல்லாங்குழல் ஓசை...

எதன் பொருட்டோ
கண்ணீரைத் துடைத்தபடி
சாலைகடக்கும்
யாரோ ஒருத்திக்கான
துக்கம் மெல்ல தொண்டை அடைக்க....

இசைக்கேற்றவாறு
மெல்லத் தலையாட்டுவதாய்
முகம் திருப்பிக் கொள்ளலாம்
நகர்கின்ற பேருந்தில்
உங்களைப் போல நானும்.

- சாயாசுந்தரம்

Pin It