செய்தொழிந்த காலம்
தவறடிபட்டு சரிய,
மீண்டுமொரு
மின்னல் பற்றி
இயங்க - இயக்க
மனப்படவில்லை மாயங்கள் !!

அன்றிரு பறவைகள்
எச்சமிட்ட மரம் ,
இலைகள் கசக்கி
வெற்றுவேர்களுடன்
காயப்பட்ட சுற்றமாகி ..

இந்நாளின் கடிகாரங்கள்,
காலத்தை
வாழ்வின் திசை திருப்பிவிட்டு..
அதிகப்பிரசங்கக் காதலை
கானல்நீரென்ற
பாலையின் பாடுபொருளாக்கி,
கவிதையொன்றிற்கென
மீட்டுகிறது என்னை..!


-
ஆறுமுகம் முருகேசன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

 

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.