காலம் கலிகாலம்
பசுக்களுக்காக பிரார்த்திக்கின்றன
பன்றிகள்

பச்சோந்திகளின்
நிற மாற்றம்
காவி கறையாய்

சொல் வீச்சிகளில் புழுகிய நல்லாட்சிக்குள்ளிருந்து
கல் வீச்சு

எறி வாங்கப் பழகியிருக்கிறோம்
திருப்பி எறிய
திராணியற்று

பேர் பொருத்தமும்
சீர் திருத்தமும்
ஆதாயம் பற்றியே,
சமுதாயம் பற்றியல்ல
நம் தலைகள்
தரு தலைகளாய்....

சுரண்டலுக்கும் சுவீகரிப்புக்கும் நடுவில்
முகம் விழித்த முற்றம்
மௌனித்த குருடுகளாய்
நம் சுற்றம்

மண்பற்றி அரச வேர்
மதம்பிடித்து வளர
பக்தர் இல்லா மலையெல்லாம் புத்தர் சிலை!

கழுத்தறுக்கும் காலம் முடிந்து
இப்போது
கருவறுக்கும் காலம்!!

- ரோஷான் ஏ.ஜிப்ரி

Pin It