வரமென்று சொல்லும்
சாபத்தில் கடவுளின்
தீராத் துயரொன்றை சுமக்கவே
வந்து போகிறார்கள்....
அவர்களின் இரவும் நிலவும்
பகலாகியும் நீங்குவதில்லை...
அவர்களின் கனவெங்கும்
கரைசேரவே காத்திருக்கிறது
விடியல்....
கடலடியில் கரை தேடும்
பாதங்களையே அவர்கள்
சுமக்கிறார்கள்....
கதைகளின் நாக்கில் தினம்
ஒரு நிறம் பூசி
மாயக்காரியாகிறார்கள்....
பெரும் அழுகைக்கும் பெரும்
சிரிப்புக்கும் இடையே
தங்களை
சாட்சியாக்கிக் கொள்கிறார்கள்....
நீங்களோ நானோ அல்லது
அவர்களோ கூட
அதைத்தான் விரும்புகிறோம்....
யார் நினைப்பது போலவும்
அவர்கள் இல்லை....
தாங்கள் நினைப்பது போலவும்
இருப்பதே இல்லை
இந்த அம்முக்கள்.....

- கவிஜி

Pin It