அழுதழுதா விடியுமிந்த இரவு
எனும் அசரீரி எனதறையில்
நீண்ட குழல் விளக்கில்
பழுதடைந்த ஒளியாய்
விட்டுவிட்டுத் துடிக்கின்றது
கொள்ளிக்காடெனத் திரள்கின்றது
உலகவிதை
தூக்கியெறிப்படும் அதன்
பெருவெடிப்பில்
கருகிக் கொண்டே முளைக்கின்றது
சூரிய வெளிச்சம்...
இனி
இதயமில்லாப் பரமாத்மா
ஆப்பிளை வடிவமைத்துக்
காதலெனக் காட்டிக் கொடுக்க
ஏவாளின் மீது விழும் பழி ...!

- புலமி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.