வேறு வழியில்லை
எனும் பொருட்டு தொடர்கிறது
வாழ்தல்

துணிவின்
விஷமேறிக் கிடத்தலே
சாதல்

பிரக்ஞையின்
மூச்சறுந்து தொங்கும்
நிகழ்தல்

இருதுளை பலூனில்
ஊதும் காற்றாய்
கனவுகள்

ஏக்கங்கள் நிரம்பிய
குடுவையாய்
உடல்

இறுதி மூச்சு
எதுவெனவே அமைகிறது
தேடல்

நின்று போவற்கு
முந்தைய நொடிமுள்ளாய்
நீள்கிறது வாழ்க்கை.

- ப.செல்வகுமார், பெரம்பலூர்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.