எறிந்த கல்

வரைந்து போனது

கண்ணாடியில் சிலந்திவலை

____________________

 

வேகாத வெயிலில்

வெந்துபோகிறது

ஐஸ் விற்பவரின் பாதம்.

______________________

 

என்ன வேண்டுதலோ

கோயிலில் மொட்டையாய்

இலையுதிர்த்த மரம்.

_______________________

 

மரத்திற்கு மருத்துவம்

ஊசிப்போடுகிறது

மரம்கொத்தி!

_______________________

 

கோபுரம் பார்த்து

வெள்ளையாய் சிரிக்கிறது

உடைந்த தேங்காய்!

 

- தக்ஷன், தஞ்சை

எறிந்த கல்
வரைந்து போனது
கண்ணாடியில் சிலந்திவலை
_______________________
 
வேகாத வெயிலில்
வெந்துபோகிறது
ஐஸ் விற்பவரின் பாதம்.
_______________________
 
என்ன வேண்டுதலோ
கோயிலில் மொட்டையாய்
இலையுதிர்த்த மரம்.
_______________________
 
மரத்திற்கு மருத்துவம்
ஊசிப்போடுகிறது
மரம்கொத்தி!
_______________________
 
கோபுரம் பார்த்து
வெள்ளையாய் சிரிக்கிறது
உடைந்த தேங்காய்!
 
-தக்ஷன், தஞ்சை

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.