இடது கையில்
துப்பாக்கியும்
வலது கையில் கத்தியும்  
வைத்திருந்த நான்
கணத்துக்கும் குறைவான
நேரத்தில்
திரும்பிக் கொள்ள திரும்புகையில்
அதற்கு முன் இடம் மாறி இருந்த
ஆயுதங்களின் பாஷையில்
இடைவெளியற்று
நிறைந்து கிடந்தேன்....

தூக்கிப் போனவர்களால்
என்னை இப்பக்கம்
அப்பக்கம் என்று பிரித்துப்
பார்க்க முடியாமல்
கடைசியில் துப்பாக்கியை
கத்தி என்றும் கத்தியை
துப்பாக்கி என்றும்
கோஷம் போட்டார்கள்......

நிறைந்து கொண்டிருந்த
குருதிப் புனல்களில்
ஆயுதம் துறந்திருந்தது
என் மரணம்...

- கவிஜி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.