fish river

நள்ளிரவில் தட்டப்படும்
கதவுக்குப் பின்
கடவுளே நின்றாலும்
திறக்க
மறுக்கத்தான் செய்கிறது
தாழ்....

---

கொண்டாட்ட நாட்களில்
வீட்டில் முளைக்கின்றன
இன்னும் இரு ஜன்னல்கள்...

---

நீச்சல் தெரியாதவனின்
மரணம்
அச்சுறுத்துகிறது மீன்களை.....

---

நள்ளிரவில் கூடு
திரும்பும் பறவை
இரையோடு கொஞ்சம்
பகலையும்
கொண்டு வருகிறது....

---

கடலை வரைந்து
மழைக்குள்
கப்பல் ஆக்குகிறது....
மீன்கள் எப்படி
கண்ணாடிக் குடுவைக்குள்
என்று
யோசிக்கும் கிராமத்து
பால்யம்....

- கவிஜி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.