rain leafவாசலில்
தேங்கி விட்ட சேற்றில்
செந்தாமரை
விதைத்துப் போனது
எதிர்வீட்டுப் பெண்ணின்
பாதங்கள்....

---

இன்னும் கொஞ்ச நேரம்
என்று மார்புக்குள் முகம்
புதைத்து
நீ தூங்குவதில்
முடிகிறது
இந்த தீபாளியும்....

---

நீ வெடித்த பட்டாசுகளின்
ஞாபக வெளிச்சங்களாய்
உன் செல்ல பயங்கள்...

----

எல்லா மழைக்கும்
உன் கூந்தல் குடையாகிறது
நனைந்தும் நனையாமல்
மழலை நடை எனது....

---

குளித்து முடித்து ஈரம்
சொட்ட சொட்ட
நீ வீட்டுக்குள் அலைவதில்
தொடங்குகிறது
ஞாயிறின் பின் மதியம்...

- கவிஜி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.