moon 400 copyஇறந்தவனின் புகைப்படம்
முன்னால் நீர்
வைக்கும் அதே இரவில்தான்
இன்னும் இறுக்கமாக
தாழிடப்படுகின்றன
கதவுகள்...

---

உடுக்கை அடித்து இழுத்து
வரப்பட்ட
இசையின் சாயலில்
கூட்டத்தோடு நின்று
வேடிக்கை பார்த்தார் கடவுள்...

---

எறும்பை எண்ணிக் கொண்டே
தலை கவிழ்ந்து கிடந்த
சோமாலியக்
குழந்தையின் எலும்பை
எண்ணிக் கொண்டிருந்தன
புகைப்படங்கள்...

---

மீண்டும் மீண்டும்
எழுதப்படுகின்றன
ஆள் மாறி படிக்கின்ற
உரியவரிடம் சேராத
கடிதம்....

---

இரவை உடைத்துக்
கொண்டு
உருண்ட நிலவை
அனாயசமாக
பிடித்து நெற்றியில்
அடைத்தவள்- என்
முதுகோரம்
தொலைத்தும் விட்டிருந்தாள்
விடியலில்...

- கவிஜி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.