உலகில் மற்ற எந்த நாட்டிலேயும் ஒரு குறிப்பிட்ட சாதிக்காரன் ஒரு விலங்கை தின்னமாட்டான் என்பதற்காக அதை புனிதமாகக் காட்டி மற்ற யாரும் அதை தின்னக்கூடாது, தின்னால் வெட்டுவேன், குத்துவேன் என்றெல்லாம் சொல்வதில்லை. இந்தியாவில் மட்டும் தான் இந்தக் கொடுமை தலைவிரித்து ஆடுகின்றது. பல்வேறு மொழிகளையும், பண்பாடுகளையும் கொண்ட ஒரு நாட்டில் தங்களுக்குப் பிடிக்காத உணவை வேறு யாரும் தின்னக்கூடாது என சொல்வதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. ஆனால் அடுத்தவர்களின் பண்பாடுகளையும், பழக்க வழக்கங்களையும் மயிரளவுக்குக் கூட எப்போதும் மதிக்காத பார்ப்பனியம் தன்னுடைய பார்ப்பன கொள்கையைத்தான் அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என வன்மத்தோடு வேலை செய்கின்றது.
பெரும்பாலான மாநிலங்களில் மாடுகளைக் கொல்வதற்கும், மாட்டிறைச்சி உண்பதற்கும் எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை. பி.ஜே.பி ஆளும் சில மாநிலங்களில் மட்டும் குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், ஹரியாணா போன்ற மாநிலங்களில் தான் மாட்டிறைச்சிக்குத் தடைவிதித்து இருக்கின்றன. மற்ற மாநிலங்களில் அவற்றை கொல்வதற்கோ, உண்பதற்கோ எந்தத் தடையும் இல்லை. மற்ற மாநிலங்களில் இறைச்சிக்காக கொல்லப்பட்டு பீப் சில்லியாகவும், பீப் வறுவலாகவும், பீப் பிரியாணியாகவும் சாப்பிடுகின்றார்கள். அதனால் அவர்கள் நல்ல உடல் நலத்துடன் இருக்கின்றனர்.
ஆனால் பார்ப்பனர்களுக்கும் அவர்களை அண்டிப்பிழைக்கும் அடிமைகளுக்கும் அடுத்தவன் நல்ல உடல்நலத்துடன் இருந்தான் என்றால் எப்போதுமே பிடிக்காது. எந்த உடல் உழைப்பிலும் ஈடுபடாத இந்தப் பார்ப்பனக் கூட்டம் தன்னைப் போலவே வெண்பொங்கலும், புளியோதரையும், தயிர்சோரையும் மக்கள் தின்றாலே நல்ல ஆரோக்கியமாக வாழ்வார்கள் என நினைத்துக்கொண்டு இருக்கின்றது. அதனால் மற்ற மக்கள் அதை விரும்பி உண்ணும்போது அவர்கள் மீது பாய்ந்து வெறி நாய்யைப்போல கடித்துக் குதறுகின்றது.
2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் குஜராத்தின் சூரத் மாவட்டத்தில் உள்ள தேவதா என்ற கிராமத்தில் ரபீக் இலியாஸ்பாய் கலீஃபா என்ற நபரை போலீசார் கைது செய்தனர். அவர் செய்த மாபெரும் தேசத் துரோகக் குற்றம் என்னவென்றால் அவர் 20 கிலோ மாட்டிறைச்சி வைத்திருந்தார் என்பதுதான். இந்த வழக்கில் கடந்த ஞாயிறன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி சி.ஒய். வியாஸ் குற்றம் சாட்டப்பட்ட ரபீக் இலியாஸ்பாய் கலீஃபாவுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ 10000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார். மேலும் தீர்பில் “பசு என்பது ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்களின் மத உணர்வாகும். எனவே இத்தகைய குற்றங்கள் சமூகத்தின் அமைதியைக் குலைப்பது. எனவே இவருக்குச் சிறைதண்டனை அளிப்பது மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமையும்” என்று தன்னுடைய பயங்கரமான பார்ப்பன நாக்கால் கூறியிருக்கின்றார்.
நமக்குத் தெரிந்து இந்தியாவில் பார்ப்பனர்களும், பார்ப்பனர்களைப் போலவே தங்களையும் மேன்மையானவர்கள் என்று காட்டிக்கொள்ள முற்படும் சூத்திரர்கள் (வேசிக்கு பிறந்தவர்கள்) மட்டுமே பெரும்பாலும் மாட்டிறைச்சி சாப்பிடுவதில்லை. மற்ற மக்கள் குறிப்பாக இஸ்லாமியர்கள், தலித் மக்கள், பார்ப்பன பண்பாட்டை கடைபிடிக்காத சாதி இந்துக்கள் அனைவரும் மாட்டிறைச்சியை விரும்பி உண்கின்றனர். அவர்கள் மாட்டை மாடாக மட்டுமே பார்க்கின்றார்கள். வேறு எந்தக் கருமமாகவும் பார்ப்பதில்லை. ஆனால் நீதிபதி கொஞ்சம் கூட சுரணையே இல்லாமல் பசு என்பது ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்களின் மத உணர்வாகும் என்கின்றார். பட்டையைப் போட்டுக்கொண்டு அறை நிர்வாணமாக பார்ப்பன கோவிலுக்கு ஓசியில் உண்டகட்டி வாங்கித் தின்னப் போகும் முட்டாள் பயலுகள் எல்லாம் நீதிபதி ஆனால் இப்படித்தான் தீர்ப்பெழுதுவான். மாட்டுக்கறி தின்றால் சமூகத்தில் அமைதி குலைந்துவிடுமாம். காசு குடுத்துக் கறியை வாங்கும் உழைத்து வாழும் மக்கள் கறிவேகும் போது குலைந்துவிடக் கூடாது என கவலைப்படுகின்றனர். சும்மா உட்கார்ந்துகொண்டு தன்னுடைய பார்ப்பான நாக்கை வைத்துக் கொண்டு ஊர்வம்பை இழுத்துக் கொண்டிருக்கும் பார்ப்பன கூட்டம் சமூக அமைதி குலைந்துவிடும் என்று பயமுறுத்துகின்றது.
இந்த ஆண்டில் மட்டும் மாட்டுக்கறியை மையப்படுத்தி பல கலவரங்களைப் பூணூல் கூட்டம் செய்துள்ளது. மத்திய பிரதேசத்தில் ரயிலில் பசு மாட்டிறைச்சியைக் கொண்டு சென்றதாக கூறி முஸ்லீம் தம்பதிகளின் மீது சுயநியமான பசு பாதுகாப்பு அமைப்பு என்ற கேடி கூட்டம் தாக்குதல் தொடுத்தது. உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் மருத்துவ கல்லூரி உணவகத்தில் மாட்டிறைச்சி பிரியாணி பரிமாறப்பட்டது என போலியான தகவலை பூணூல் கூட்டமே பரப்பி கலவரம் செய்தது. டில்லியில் உள்ள கேரளா அரசின் விருந்தினர் மாளிகையில் உள்ள உணவுவிடுதியில் மாட்டிறைச்சி என்கின்ற பெயரில் பசுவின் இறைச்சி உணவாக அளிக்கப்படுவதாக குற்றம் சாட்டி காவி பயங்கரவாதிகள் அடாவடித்தனம் செய்தனர்.
‘ஏன்டா இப்படி அறிவே இல்லாம பார்ப்பன பயல்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டு கேவலம் மாட்டுக்கறிக்காக சண்டை போடுறீங்க’ என்று கேட்டால் சட்டத்திலேயே ஆர்டிகள் 48 பசுவதை தடுப்பை பற்றி சொல்லி உள்ளது என சட்டம் பேசுகின்றார்கள். இந்த முட்டாள்களுக்கு இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் இப்படி ஒரு சரத்தைக் கொண்டு வர சொல்லி சதி செய்தவர்கள் அப்போது அதிகாரத்தில் பெரும்பான்மையாக இருந்த பார்ப்பன கூட்டம் தான் என்பது தெரியாது.
இந்துக்களின் அதாவது பார்ப்பனர்களின் கருத்துபடி பசு புனிதமானது. எனவே அதை பசுவதைத் தடை சட்டமாக கொண்டுவரவேண்டும் என அரசியல் நிர்ணய சபையில் அது பற்றி விவாதம் நடந்தபொழுது அசாம் மாநிலத்தைச் சேர்ந்த முஸ்லீம் அல்லாத ஒரு காங்கிரஸ்காரர் 1949 ஆம் ஆண்டு நவம்பர் பத்தொன்பதாம் தேதி இவ்வாறு பேசினார். “ எப்படி பார்த்தாலும் பசுவை வெட்டுவதற்கான தடை பொருளாதார நோக்கில் பயனுள்ளதாக இருக்காது. பசு வெட்டப்படுவதை முழுமையாகத் தடை செய்தால் அது அரசியல் அமைப்புச் சட்டத்தில் ஒரு கரும்புள்ளியாகவே இருக்கும். அத்தோடு நாட்டு மக்களை குறிப்பாக மலைவாழ் மக்களை அடக்குமுறைக்கு உட்படுத்துவதாகவும் அமைந்து போகும். ஏனெனில் அவர்கள் மாட்டிறைச்சி உண்பதற்காகவே கால்நடைகளை வளர்க்கிறார்கள். திருவிழாக்களில் பசுக்களைப் பலியிடும் மக்களையும் அடக்குமுறைக்கு உட்படுத்துவதாகத்தான் அச்சட்டம் இருக்கும். அசாமிலுள்ள இந்துக் கூர்க்காக்கள் கூடத் துர்கா பூசையின் போது எருமைகளைப் பலியிடுகிறார்கள்”. என்றார்.
ஆனால் கொஞ்சம் கூட சுரணையே இல்லாத பார்ப்பன கூட்டமான அன்றைய காங்கிரசு கோடிக்கணக்கான மக்களின் உரிமையையும் பழக்க வழக்கத்தையும் மயிர் அளவுக்குக்கூட மதிக்காமல் தன்னுடைய பார்ப்பன கருத்தியலான பசுவதை தடையை அரசின் நெறி முறையாக ஏற்றுக்கொண்டது. இஸ்லாமியர்களையும், தலித்துகளையும் தனிமைப்படுத்த வேண்டும் அவர்களை துன்புறுத்த வேண்டும் என்ற அயோக்கியத்தனமான சிந்தனையின் வெளிப்பாடாகவே இந்தச்சட்டம் கொண்டுவரப்பட்டது. அந்தக் கேடுகெட்ட சட்டத்தை பயன்படுத்திதான் இன்றும் பார்ப்பன கூட்டம் தலித்மக்களையும், இஸ்லாமியர்களையும் துன்புறுத்திகொண்டு இருக்கின்றது.
மதவெறி ஊட்டப்பட்ட சில சாதி இந்துக்களும் உண்மை தன்மையைப் பற்றி தெரிந்துகொள்ளாமல் தன்னுடைய சொந்த சகோதர மக்களின் மீது வன்மத்தோடு தாக்குதல் தொடுக்கின்றார்கள். இதனால் அதாயம் அடையப்போவது பார்ப்பன கூட்டம்தான் என அவர்கள் தெரிந்து கொள்வதில்லை. நம்பிக்கை இல்லை என்றால் சுற்றும் முற்றும் பாருங்கள், எவன் எவனெல்லாம் பசுவதை தடை வேண்டும் என்கின்றானோ அவனெல்லாம் நிச்சயம் பார்ப்பன பயலாக இருப்பான் இல்லை என்றால் பார்ப்பன சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்ட மானங்கெட்ட மடப்பயலாக இருப்பான். நேர்மையான மனிதர்கள் யாரும் அடுத்தவனின் உணவு சுதந்திரத்தில் தலையிடுவது கிடையாது. ஜனநாயகம் என்றால் என்னவென்றே தெரியாத பாசிச கூட்டம்தான் இப்படி தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக அடுத்தவனின் உரிமையில் தலையிடுகின்றது.
நாட்டில் விலைவாசி உயர்வு, வறுமை, வேலையில்லா திண்டாட்டம், தீண்டாமைக்கொடுமை, பாலியல் வன்முறைகள் என்று எவ்வளவோ பிரச்சினைகள் உள்ளது. அதைப்பற்றி எல்லாம் கொஞ்சம் கூட கவலைபடாத பார்ப்பன கூட்டமும் அவர்களை அண்டிப்பிழைக்கும் மானங்கெட்ட சாதி இந்துக்களும் அப்பாவி மக்களின் மீது மாட்டுக்கறியைத் தின்றார்கள் என்று சொல்லி தாக்குதல் தொடுக்கின்றார்கள். கொலையும் செய்கின்றார்கள். அரசின் அனைத்து துறைகளையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு பாசிச அரசு என்னவெல்லாம் செய்யும், செய்ய முடியும் என்பதற்குக் குஜராத்தும், குஜராத் நீதிமன்றமுமே ஒரு நல்ல சான்று.
- செ.கார்கி