சாதிப் படிநிலை கருத்தில் கொள்ளாது
நீதி வழுவின் வர்க்கப் போரைக்
காணல் அரிது, காணினும் நொடியில்
பேண இயலாது மறைந்து போகும்
புரட்சி வராமல் தடுக்கப் பின்நின்று
துரத்தும் பார்ப்பன ஆட்சியை முதலில்
ஒழிப்பதே புரட்சியை வேண்டுவோர் செய்யும்
பழியிலாப் பணியென உணர்வ தென்றோ?

(சாதியக் கொடுமைகள் (பார்ப்பனர்கள் மற்ற அனைவரையும், பிற்படுத்தப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்களையும் ஒடுக்கும்) படிநிலையில் இருப்பதைக் கணக்கில் கொள்ளாது, நீதி வழுவினால் புரட்சியைக் காண முடியாது. தவறி, (வர்க்க முரண்பாட்டை மட்டுமே கணக்கில் கொண்டு) புரட்சி ஏற்படுத்தப்படுமானால் அதைக் காக்க முடியாமல் நொடியில் அழிந்து விடும். புரட்சி வராதபடி தடுக்கப் பின் நின்று துரத்தும் பார்ப்பன ஆதிக்கத்தை முதலில் ஒழிப்பதே (இந்தியாவில்) புரட்சியை வேண்டுவோர் செய்ய வேண்டிய தவறு இல்லாத பணி என்று என்று தான் உணர்வார்களோ?)

- இராமியா

Pin It