nightவெப்ப மீதியைப்
பகலவன்
வெளிச்சமாக்கி
வார்த்திருந்தான்
நிலாப் பொத்தல்வழி

புகலிடம் தேடிய
புழுக்கத்தைத்
தன்வசமாக்கிய
கனவுகளோடு
புரண்டுகொண்டிருக்கையில்

மருந்துண்ணியாகிவிட்ட
முதியவரின்
இறுதி ஈனக் குரல்
இருமலாய்க் குடிசை
இருள் கிழிக்க

எங்கோ
காற்றில் பரவிய
இசைமொழியைச்
சவ்வூடு பரவலாய்
இரவு பரவவிட்டிருக்க


அங்கே
அர்த்தப்பட்டுக்
கொண்டு இருந்தது

இருளின்
பயங்கரமும்
இரவின்
நிசப்தமும்.

- மகிவனி

Pin It