ஏதோ ஒன்று
என்னைக் கடந்து போனது
அது வரை
சலனமில்லை
அதற்குப் பின்
சலனமில்லாமல்
இல்லை.

-----
ஒவ்வொரு நாளும்
குளிக்கும்
நாம்
ஒவ்வொருத்தருக்காகவும்
குளிக்கும்
இந்தக் குளியலறை.

-----
பிள்ளைகளை
வளர்ப்பதை
குழந்தைகளிடம்
கற்றுக்கொள்ளுங்கள்
அவர்கள்
தங்கள் பொம்மைகளை
அழ விடுவதேயில்லை.

-------
இப்பொழுதெல்லாம்
மரங்களே இல்லை
ஆனால்
நிறைய
விழுதுகளைக் காண முடிகிறது
அண்ணனின் விழுதுகள்
தலைவனின் விழுதுகள்......

- எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It