மார்க்சிய அறிவும் சுதந்திர உணர்வும்
ஈர்க்கப் பெற்றவர் சமரச மற்ற
போரைத் தொடுப்பது இயல்பென் பதாலே
சூழ்நிலைக் கேடும் புவிவெப்ப உயர்வும்
வாழ்வ தென்றால் சமதர்மம் வழியென
தீர்வது சொல்வதால் இயற்கை தானும்
மார்க்சியம் கற்றதோ வியப்புறு கின்றேன்

          (மார்க்சிய தத்துவத்தினாலும் சுதந்திர உணர்வினாலும் ஈர்க்கப்பட்டவர்கள் (சுரண்டலுக்கு எதிராகச்) சமரசமற்ற போரைத் தொடுப்பது இயல்பு தான். (ஆனால் உயிர் இல்லாத) இயற்கையானது சூழ்நிலைக் கேடு அடைந்தும் புவி வெப்ப உயர்வைத் தோற்றுவித்தும் (இவ்விரண்டு கேடுகளையும் முன்னெடுத்துச் சென்றால் தான் நிலைக்க முடியும் என்ற சந்தைப் பொருளாதார முறையை ஒழித்துவிட்டு, மக்களுக்கும் சமூகத்திற்கும் தேவையானவற்றை உற்பத்தி செய்யும் சுதந்திரத்தை உயிர் மூச்சாகக் கொண்ட) சோஷலிசப் பொருளாதார முறையை ஏற்றுக் கொண்டால் தான் புவியை அழிவில் இருந்து காப்பாற்ற முடியும் என்று தீர்ப்பு சொல்வதால் இயற்கையும் மார்க்சியத்தைக் கற்றதோ என்று வியப்பை அடைகிறேன்.)

- இராமியா

Pin It