இந்திய மண்ணில் உராய்வை வென்றும்
அந்நிய மண்ணில் பொருளிலா நிலையிலும்
ஊனையும் உயிரையும் உருக்கி எடுத்து
வானையும் அளக்கும் கல்வியாய் மாற்றிக்
கற்றதன் பயனை உமக்கெனக் கொள்ளாது
உற்றவர் அடிமைத் தளைகள் நீங்கவே
எமக்கு ஈந்தனை அண்ணலே வாழ்க
 
(இந்திய மண்ணில் (ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி கற்க முடியாத படி உள்ள) உராய்வுகளை எல்லாம் வென்றும், அந்நிய மண்ணில் போதுமான நிதி வசதி இல்லாமல் வருந்திய நிலையிலும், ஊனையும் உயிரையும் உருக்கி எடுத்து, வானையும் அளக்கும் கல்வியாகக் கற்று, கற்றதன் பயனை தன் சொந்த நலனுக்குப் பயன் படுத்தாமல் (உம்மைச் சேர்ந்த) ஒடுக்கப்பட்ட மக்களின் அடிமைத் தளைகளை உடைக்க, அனைத்தையும் எமக்கே ஈந்த அண்ணல் அம்பேத்கர் புகழ் வாழ்கவே.)

- இராமியா

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.