அவனுக்கு சில்வர் டம்ளரிலும்
எனக்கு அலுமினிய குவளையிலும்
கொடுத்தார்கள் தேனீர்;
நல்லவேளை
ஆதிக்க சாதிக்குக் கொடுத்த டம்ளரில்
கொடுக்கவில்லை எனக்கு
கருமம்.
அருவெறுப்பும், அழுக்குகளும்
நிறைந்த ஒன்றைத்தொட
எப்படி மனசு வரும்
எனக்கு.
சூரியனை கையால் மறைக்க முடியுமா. பூர்வ குடிகளை அழிப்பதும் இழிவுபடுத்துவதும் தவிர வேரு என்ன செய்ய முடியும்.. நம் அடையாளத்தை எந்த கொம்பனாலும் மறைக்க முடியாது. சூரியனை பார்த்து நாய் குரைப்பது போல.