கையொடிந்தோ
காலொடிந்தோ
கண்ணயர்ந்து கிடப்பவனிடத்து
ஆறுதல்களைத் திணிப்போம்
நிகழ்ந்த விதம் கேட்டு
வலியிருக்குமெனத் தெரிந்தும்
வலிக்கிறதாவெனக் கேட்டு
பிறகு பேசுதற்கு ஏதுமற்று
பக்கப் படுக்கைகளைப் பற்றி விசாரித்து
இடையிடையே கடிகாரம் பார்த்து
போக்குவரத்து நெரிசலைப் பேசி
வரும்போது பார்த்த
விபத்திலடிபட்டவனை விவரித்து
விடைபெற்று வீடு சேரும்போது
ஞாபகம் வரும்
ஸ்பரிசமற்று நிகழ்ந்த
சந்திப்பும் பிரிவும்
அங்கோ
அழுகத் தொடங்கியிருக்கும்
ஆரஞ்சுப்பழ ஆறுதல்கள்.
- யுகயுகன்
ஆறுதல்கள்
More articles by யுகயுகன்
- பறவையாகத்தானிருந்தது (31 ஜன 2012)
- என்னைப் போலொருத்தி (22 ஜன 2012)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.