அக்கொடிய விலங்கு
முன்பு ஒரு பறவையாகத்தானிருந்தது
 
அதன் சிறகுகள்
வெட்டப்படாத வரை
 
அதன் தானியங்கள்
திறந்திருந்தவரை 
 
அதன் முட்டைகள்
திருடப்படாத வரை
 
அதன் ஒரு விழியை
கவண் கல்லொன்று உதிர்க்காத வரை
 
அதன் கூடிருந்த கிளையில்
தீப்பிடிக்காதவரை
 
அதன் ஆகாயத்தின் நீலமும்
பூமியின் பசுமையும்
நிறம் மாற்றப்படாதவரை
 
கரிந்த மரமொன்றை
காணாதவரை
அதன் கனிகளில் ஒன்றை
ருசிக்காத வரை
 
முன்பு ஒரு பறவையாகத்தானிருந்தது
அக்கொடிய விலங்கு.

                        -  யுகயுகன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.