என் கற்பனை வீடு
மிகவும் அலாதியானது.
ஆண்டுபல கடந்தும்
சுவர்களும் திரைச்சீலைகளும்
புத்தம்புதிதாய்
வெண்ணிறமாய்
தூய்மையாய்.
வீட்டின் அறை முழுவதும்
சோபா செட்டுகள்
புத்தகக் குவியல்
தொலைக்காட்சி
ஆங்காங்கே பொம்மைகள்
நானும்
என் மகளும்.
எங்கள் இருவரின்
பேச்சுகளும்
சுவாசங்களும்
அழுகைகளும்
சிரிப்புகளும்
தூக்கங்களும்
விழிப்புகளும்
சோம்பல்களும்
சுறுசுறுப்புகளும்
ஆங்காங்கே சிதறுண்டிருந்தன.
எவரின் குறுக்கீடுகளும்
ஆதிக்கமும் இன்றி
இயல்பாய் பயணித்தது
எங்கள் வாழ்க்கை
நேற்றுவரை.
இன்று
என் வீட்டின் கதவு திறந்த சப்தம்
கேட்கவே இல்லை.
என் படுக்கையில்
நீ உறங்கிக் கொண்டிருக்கிறாய்.
அவன் உறங்கும் என் படுக்கையறை
More articles by மனுஷி
- பயணங்களின் அதீத சுவை (23 ஜன 2015)
- புத்தனின் காதல் (09 நவ 2012)
- வலிந்து பேசப்படும் காயத்தின் ஆழங்கள் (19 ஜூலை 2012)
- நான் பைத்தியம் ஆக்கப்பட்டிருக்கிறேன் (27 ஜூன் 2012)
- புதருக்கு அப்பால்… (11 பிப் 2012)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.