வரப்பை நீக்கிய கூட்டுப் பண்ணையில்
தரமிகு வேளாண் பொருளைப் படைக்கவும்
முதலெனும் நுகத்தடி களைந்த தொழிலில்
மதியுடை மக்களின் தேவையை யுணர்ந்து
புவியை அதிகம் பிழியா வண்ணம்
நவிலும் சான்றோர் நல்லுரை கேட்டு
வேண்டிய பொருளை உற்பத்தி செய்ய
ஈண்டு அமைப்போம் உழைப்பவர் அரசை
(வரப்புகளை நீக்கி, கூட்டுப் பண்ணைகளை அமைத்து, அங்கே தரம் மிகுந்த வேளாண் பொருட்களை உற்பத்தி செய்யவும், மூலதனம் என்ற நுகத்தடியை வீசி எறிந்து விட்டு (சுற்றுச் சூழலுக்குக் கேடு வராதபடி) அறிவடைய மக்களின் தேவைகளை உணர்ந்து கொண்டு பூமியன் மூலாதாரங்களை அதிகமாகப் பிழியாமல், நல்லறிஞர்களின் ஆலோசனைகளின்படி (தொழிலாளர்களின் கண்காணிப்பில்) வேண்டிய பொருட்களை உற்பத்தி செய்ய உழைப்பவர்களின் தலைமையில் சோஷலிச அரசை அமைப்போம்.)
- இராமியா
புது நானூறு 33. உழைப்பவர் அரசை அமைப்போம்
More articles by இராமியா
- வாக்குப் பதிவு எந்திரம் பற்றி சங்கிகளும் நண்பர்களும் (23 மே 2022)
- சீன மக்கள் தொகையும் அப்போல்லோ மருத்துவமனை வாகன நிறுத்தமும் (06 அக் 2021)
- பாற்கடலும் கொரோனா தடுப்பு ஊசியும் (01 ஏப் 2021)
- பகுத்தறிவுச் சுடர் எஸ். ஆர். இராதா (27 ஜன 2021)
- வில் வித்தை (15 டிச 2020)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.