பால்க‌னியில் பூத்திருந்த‌
பால் நிலா பொட்டு வைத்த‌
இரவுத்தாரகையைக் காட்டிக்காட்டி
குழந்தைக்கு சோறூட்டுகிறாள் தாய்...

செங்கல் காட்டுப்பாதைகளில்
தவறவிட்ட தாயைத்தேடும்
நாய்க்குட்டிகளின் பசிக்காய்
பாதிக்கவளம் நிலாச்சோற்றை
தவறவிடுகிறாள் மழலைத்தேவதை... 

 - ராம்ப்ரசாத் சென்னை (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

1 comment

1
amayadi mahesh
பள்ளிக்கு அனுப்பம்மா... (பள்ளி செல்லும் வயதில் வேலைக்கு செல்லும் குழந்தை. அம்மாவுக்கு எழுதும் கவிதை ) பால் மணம் மாறும் முன்னே -என்னை பால்வாடிக்கு அனுப்பிய அன்னையே என்ன நினைத்தாய் இன்று -என்னை வேலைக்கு அனுப்புகிறயே! என் ஜோடி பிள்ளையெல்லாம் பள்ளிக்கு உன்- பிள்ளை நான் மட்டும் வேலைக்கா ? ஊரெல்லாம் ஒன்று கூடி- விளையாட உன் பிள்ளை நான் மட்டும் ஒண்டியாய் உழைப்பதென்? இரும்பு பட்டறையில் ஈக்கு வேலையில்லை இளகிய -என் கரங்களுக்கு மட்டும் வேலையா? என்னை பிஞ்சு குழந்தை என்கிறாய் - நீ ரேகை பார்க்கும் கண்ணாடியில் கூட -என் கை ரேகை தெரியவில்லையாம். மங்கியது ரேகை மட்டுமல்ல ... என் - அறிவும் தான் பசி நடுக்கத்தாலும் தூக்க களைப்பினாலும் கம்பி மேல் விழவேண்டியடி என் காலில் விழுகிறதம்மா என் நெஞ்சில் விழுவதற்க்குள் என்னை பள்ளிக்கு அனுப்பம்மா என் அம்மா என்னை பள்ளிக்கு அனுப்பம்மா . நன்றி... ...ஆமையடி மகேஷ்

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.