சமூக ஜனநாயகம் இன்றளவும் வளர்த்தெடுக்கப்படவில்லை என்பதற்கு சான்றுதான் – சின்ராசு கொல்லப்பட்ட நிகழ்வு. தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ளது அப்பிபட்டி ஊராட்சி. ஊராட்சி மன்றத் தலைவர் பதவி பெண்களுக்கு என ஒதுக்கப்பட்டதால், விஜயலட்சுமி என்கிற சாதி இந்து (தேவர்) பெயரளவிலும், அவரது கணவர் செல்வராஜ் நடைமுறையிலும் ஊராட்சி மன்றத் தலைவர்களாக செயல்பட்டு வருகின்றனர். அதே ஊராட்சியில் குடிநீர் திறந்து விடும் பணியாளராக 48 வயதான சின்ராசு என்ற தலித் பணியாற்றி வருகிறார். இவருடைய ஊதியத்தில் பங்காளியாய் மாறி, சம்பளத் தொகையை நிரப்பாமல் வெற்றுப்படிவத்திலேயே தொடர்ந்து கையெழுத்து வாங்கியுள்ளார், ஊராட்சி மன்றத் தலைவர்.
“சம்பளப் படிவத்தில் தொகையை நிரப்பிவிட்டு கையெழுத்து வாங்குங்கள்'' என சின்ராசு கேட்டுள்ளார். பொறுக்குமா ஆதிக்க சாதி வெறியர்களுக்கு? குடியரசு நாளான 26.01.2011 அன்று இரவு 9 மணிக்கு சின்ராசுவை வீட்டில் இருந்து அழைத்துப் போய் ஊராட்சி மன்றத் தலைவர் விஜயலட்சுமி, அவரது கணவர் செல்வராஜ், ஊராட்சி உதவியாளர் அறிவானந்தம் ஆகியோர் மிரட்டியுள்ளனர். மிரட்டலுக்கு பயப்படாமல், வீட்டுக்கு திரும்பிப் போன சின்ராசுவை, இரவு 1 மணிக்கு வந்து எழுப்பி கூட்டிச் சென்றுள்ளனர். ஒரு மணியளவில் அழைத்துப் போன சின்ராசுவை கொலை செய்து, மரத்தில் தூக்கில் தொங்குவது போல கட்டி தொங்க விட்டுள்ளனர்.
தூக்குப் போட்டு செத்ததாக சொல்லப்படும் சின்ராசுவின் காலுக்கும் தரைக்கும் இடைவெளி இல்லை. மடித்துக் கட்டிய வேட்டி அவிழவில்லை. தோளில் போட்டிருந்த துண்டு கசங்கவில்லை. கையில் இருந்த பீடித்துண்டு விழவில்லை. உடலை உரசிக்கொண்டு நிற்கும் மிதிவண்டி கீழே விழவில்லை. ஆனாலும், விசாரணைக்குப் பிறகே, கொலையா? தற்கொலையா என்று சொல்ல முடியும் என்றார் எஸ்.பி. அதுமட்டுமல்லாமல், அடுத்த நாளே மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் இருந்து அறிக்கை வந்தது – சாதிய வன்முறையை தூண்டும் வகையில் போராடுபவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்று!
சின்ராசுவின் சாவில் மர்மம் இருப்பதாக சாலை மறியல் செய்த ஆதித்தமிழர் பேரவையின் மாவட்டச் செயலர் வீரபாண்டியனும், அருந்தமிழரசு உள்ளிட்ட தமிழ்ப்புலிகள் அமைப்பினர் மூன்று பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், ஊராட்சி மன்றத் தலைவர் விஜயலட்சுமி மீது தற்கொலைக்கு தூண்டியதாக சிறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, சிறையில் கூட அடைக்காமல், மருத்துவமனையில் கைது செய்து வைத்துள்ளனர்.
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தன் அதிகார வரம்பை மீறி நாடாராக நடந்து கொள்கிறார். இதே மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்தான், தேனி மாவட்டம் தேவாரம் எனும் ஊரில் நாடார் உறவின் முறை சங்கத்துக்கு பாத்தியப்பட்ட கல்யாண மண்டபத்தில் பின்புறமாக சட்ட விரோதமாக மின்சார வேலி அமைத்து, துப்புரவு பணியாளர் முருகன் என்பவரின் சாவுக்கு காரணமான – நாடார் உறவின் முறை மண்டப நிர்வாகிகள் மீது சிறு வழக்கு கூட பதிவு செய்யாமல் முருகன் சாவுக்கு நியாயம் கேட்டுப் போராடிய 17 பேர் மீது (இச்செய்தியாளர் உட்பட) வழக்குப் பதிவு செய்தார். முடை நாற்றமெடுத்துப் போன சாதிய சமூக அமைப்பில், மநு தருமம் ஆட்சி செய்து வரும் இந்து வர்ணாசிரம அமைப்பில், வன்கொடுமைகளுக்கான தீர்வை காவல் துறையிடம் எதிர்பார்க்க வேண்டாம் என மீண்டும் ஒருமுறை எதிரிகள் சொல்லியிருக்கிறார்கள்!
கண்டுகொள்ளாத முதலமைச்சர்
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ளது கூடுமைனூர் கிராமம். 5 கொங்கு வேளாள கவுண்டர் குடும்பங்களும் 120 தலித் குடும்பங்களும் உள்ள இக்கிராமத்தில், தலித் மக்களுக்குரிய கோயிலும், கோயிலுக்கு சொந்தமாக நிலமும் உள்ளன. கோயில் நிலத்திற்கு அருகில் நிலம் வைத்திருக்கிற குருசாமி கவுண்டர், கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பதிலேயே குறியாக இருந்தார்.
கோயில் நில ஆக்கிரமிப்பை தட்டிக் கேட்டதால், கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவையின் மாவட்ட பொறுப்பாளராக இருக்கும் குருசாமி கவுண்டர், வெளியூர்களில் இருந்து வாகனங்களில், 100க்கும் மேற்பட்டோரை அழைத்து வந்து பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என கண்மூடித்தனமாக அடித்து நொறுக்கியுள்ளõர். பிப்ரவரி 5 அன்று மாலை 5 மணியளவில் இத்தாக்குதல் நடைபெற்றது. ஆனால், இன்றுவரை பெயர் குறிப்பிடப்பட்ட 7 வன்கொடுமைக் குற்றவாளிகளில் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை.
வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்குகளை கண்காணிப்பதற்காக மாநில அளவில் முதலமைச்சர் தலைமையில் 25 பேர் கொண்ட விழிகண் குழு அமைக்கப்பட வேண்டும். இக்குழு குறைந்தபட்சம் 6 மாதத்திற்கு ஒரு முறையாவது கூட்டப்பட வேண்டும் என்பது, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் விதி. வாரத்துக்கு ஒருமுறை ஏதேனும் ஒரு திரைத்துறை தொடர்பான விழாவில் மணிக்கணக்கில் பங்கேற்கும் தமிழக முதல்வர், விழிகண் கூட்டத்தில் பங்கேற்கவேயில்லை.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், விழிகண் குழு கூட்டம் நடத்தப்பட்டதா? நடத்தப்படாவிட்டால் ஏன் நடத்தப்பெறவில்லை என்று கேட்டபொழுது, முதலமைச்சர் அலுவலகம் தருகிற பதில் வியப்பாக இருக்கிறது. விழிகண் குழு கூட்டம் இதுவரையில் ஒருமுறை கூட நடத்தப்படவில்லை என்பதை பகிரங்கமாக ஒப்புக்கொள்ளும் முதல்வர் அலுவலகம், இக்குழு உறுப்பினர்களை முதல்வர் தனித்தனியே சந்தித்து பேசி வருவதால் கூட்டம் நடைபெறவில்லை என பதில் அளித்துள்ளது. அமைச்சர்களையும் கூடத்தான் தனித்தனியே தினமும் சந்தித்துப் பேசி வருகிறார் முதல்வர்; அதற்காக அமைச்சரவையை கூட்டாமல் இருக்கிறாரா?