தொடர்புடைய படைப்புகள்

விடிகின்ற பொழுதொன்றில்
விடிந்து விடலாம்
எமது வாழ்க்கை

ஆழ்ந்த மவுனத்தின்
புள்ளியிலிருந்து
வெடித்து கிளம்பும்
பேரிரைச்சலில்
நின்று திரும்பும் உலகம்

பாழடைந்த கிணற்றின்
அடி ஆழ
வெடிப்புகளுக்கு இடையேயும்
நம்பிக்கையை சுவாசிக்கிறோம்

இருள்
கவிழ்ந்த தேசத்தின்
முள் கம்பிகளுக்கிடையே
அடங்கித்திரியும்
ஆயிரமாயிரம் தீக்குச்சிகள்

பதுங்கி உறுமும்
தாய்ப்புலிக்குத் தெரியும்
எமது பசியும்
எதிரியின் பலமும்

More articles by கவின்முகில்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.