More articles by கவின்முகில்

உன் மேல்
உமிழ்கிற அளவிற்கு
கேவலமானதில்லை
எனது எச்சில்

தேய்ந்து போன
எனது செருப்புகளும்
உன்மேல் மோதி
சிறப்பை இழக்காது

முகம் சுளித்தபடி
அள்ளி வீசுகிற
என் வீட்டு நாயின்
அசிங்கங்களைவிட
அருவருப்பானது
உனது செயல்

உன்னைப் பற்றி
சிந்திக்கிற நிமிடங்களில்
உதிர்ந்து போன எனது
முடிகளை சேகரிக்கலாம்

உயிர்ப் பலிகளை
அடுக்கி அடுக்கி நீ
அமர்ந்திருக்கிற இடம்
தரைமட்டமாகிற நிமிடத்தில்
விலங்குகளும் சிரிக்கும்

பலரும்
மகிழ்கிற விதமாய்
நிகழ்கிற உனது
மரணத்திலிருந்து தொடங்கும்
எனது அத்தியாயம் .

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.