தன்னுடைய வலிப்பூவில் இல்லை இல்லை வலைப்பூவில் தந்தை பெரியாரைப்பற்றி எழுதியிருப்பதாக ஆனந்தவிகடன் இதழில் தகவலைப் படித்தேன்.பாவம்...ஜெயமோகன்...எழுத்துப்போராளி என்றெல்லாம் சிலர் பாராட்டியதைப் படித்திருக்கிறேன். எனக்கும் அதில் உடன்பாடுதான்.

ஏனென்றால் அவர் எழுதிக் கொண்டே இருக்கிறார். பாவம் ஜெயமோகன்.!

கனடாவிலிருந்து வழங்கப்படும் "இயல்விருது" தனக்குக் கிடைக்கவில்லையே என்று கொட்டித் தீர்த்தபோது அதில் நியாயமிருப்பதாக எனக்கும் பட்டது. ஜெயமோகனுக்குக் கொடுத்திருக்கலாமே என்று மனமும் நினைத்தது. எனக்கு உடன்பாடும் இருந்தது. கிடைக்காததால் நடுவர்களைத் திட்டினார். கிடைக்காதவர்கள் எல்லாரும் திட்டுவது நடுவர்களைத்தான். காரனம் நடுவர்கள் பலநேரம் அப்படி நடந்து கொள்வதும் உண்மைதான். இது எல்லா நாட்டிலும் நடப்பதாகவே தெரிகிறது.

ஓர் எழுத்தாளராகவும், எழுதாமல் இருக்கமுடியாது என்ற நிலையில் வாழ்கிற ஜெயமோகனுக்கு அதைக் கொடுப்பதை யாரும் குறைசொல்ல மாட்டார்கள். ஆனால், நடுவர்கள் அவருக்குக் கொடுக்காததன் காரணம் இப்பொழுதுப் புரிகிறது. அது நியாயமெனப்படுகிறது. ஜெயமோகன் எதை எழுதுகிறார்? எதற்காக எழுதுகிறார்? ஏன் எழுதுகிறார்? அவரை எழுதச்சொன்னது யார்? சரி, இவர் எழுதி என்ன கப்போகிறது?

இந்தக் கேள்வியைக் கேட்டுப்பாருங்கள். பதில்.. ஒண்ணும் கப்போவதில்லை. தமிழ் இலக்கிய நூல்களின் எண்ணிக்கையைக் கூட்டியிருப்பார். சரி, அவருக்கு நோபல் பரிசே கிடைத்தாலும் என்ன ஆகப்போகிறது? இயல் விருதுக்கே இவரை ஏற்காத உலகம் நோபல் பரிசுக்கா பரிந்துரை செய்யும்? சரி, அதனால் தமிழுக்குப் பெருமை வரலாம். னால், ண்டாண்டுக் காலமாய்த் தீண்டாமையால், சமுகக்கொடுமையால், மூடநம்பிக்கையால் அனுபவித்துவரும் எங்கள் சமுதாயத்திற்கு என்ன லாபம்? என்ன பெருமை? என்ன நன்மை? மேலும் மேலும் எழுதிக் கொண்டிருக்கலாமே ஒழிய வது ஒன்றுமில்லை.

வியர்வைச்சிந்தாமல்,நடுத்தெருவில் நிற்காமல், ஏச்சுக்கும் செருப்பு வீச்சுக்கும் ஆளாகாமல் மையை மட்டுமே சிந்தும் இவர்களால் என்ன மாற்றம் நிகழும்? அதற்கு எத்தனை நூற்றாண்டுகள் ஆகும்.? அது எப்போது நிகழும்? வியட்நாமை பிரான்சு க்கிரமித்துக் கொண்டிருந்த பொழுது, வியட்நாமியக் கவிஞன் ஒருவன் குறிப்பிட்டான் "பிரெஞ்சுக்காரர்களின் ஆயுதங்கள் எங்களை அடிமைப்படுத்தின.னால், அவர்களுடைய நூல்கள் எங்களுக்கு விடுதலை தந்தன"

அப்படி ரோசமுள்ள, சுயமரியாதை உள்ள, உதிரத்தில் கொஞ்சமேனும் தன்மானமுள்ள தமிழர்கள் உள்ள தமிழ்நாட்டில், எப்போது எங்களுக்கான விடுதலையைப் பெறுவது? எப்போது எங்கள் மீதான திக்கத்தை அகற்றுவது? தீண்டாமையைஒழிப்பது எப்போது?

டால்ஸ்டாயைப்போல 15 வது வயதில் ரூசோவின் "சமுதாய ஒப்பந்தம்" நூலைப்படித்து ரூசோவின் உருவம் தாங்கிய படத்தைப் பெருமையுடன் அணிந்துகொண்டதைப் போல ஒருமாற்றம் தரும் எழுத்தை எழுதப்போகிறாரா?மாற்றம் வருமா? அப்படி விழித்தெழச் செய்யும் எழுத்துக்களை ஜெயமோகன் எழுதுகிறாரா? இல்லை. இல்லவே இல்லை.

அவர் நோக்கமெல்லாம் நவீனத்தை; பல இசங்களை தன் எழுத்தில் கொண்டுவருவது. எழுதிக்கொண்டே இருப்பது. Beating around the bush என்பார்களே அதைப்போல சுற்றிவளைத்து மூக்கைத்தொடுவது. இதனால் ஆகப்போவது ஒன்றுமில்லை. இலாபமும் இல்லை. நட்டமும் இல்லை. 96 வயது வரை, உடல் கோளாறு இருந்தும், சாகும்வரை போராடிக் கொண்டிருந்த ஒரு சமுகப்போராளியை; பெரியாரைக் கிண்டல் செய்திருக்கிறார். இல்லை அவமானப்படுத்தியிருக்கிறார்.

"அவரை ஒரு சிந்தனையாளராகவோ ,அறிஞராகவோ எண்ணவில்லை. அவரைப்பற்றிய இன்றைய போக்குகள் பத்தானவை." என்றெல்லாம் எழுதியிருக்கிறார். அவருடைய தலைமுறை நோக்கில் என்றும் எழுதுயிருக்கிறார். நோக்கமே இல்லாத தலைமுறைக்கு நோக்கென்ன வேண்டியிருக்கிறது.! நோக்கமென்ன இருக்கமுடியும்?

அறிஞராகவோ! ஞானியாகவோ! நபியாகவோ! இயேசுவாகவோ யாரும் தேவையில்லை. யாரும் இருக்கவேண்டாம். ஆலயத்துக்குள் அல்ல வீதிக்குள்ளேயே வரமுடியாத கொடுமையை எதிர்த்து வைக்கத்தில் போராடினாரே ...பெரியார்....அவரைப்போன்றவர்கள்தான் எங்களுக்கு வேண்டும்... இன்றைக்கு வேண்டும். என்றைக்கும் வேண்டும்..

எந்த வேதங்களும் எங்களுக்கு வேண்டாம். வெண்தாடி வேந்தர் போன்றவர்களே வேண்டும். கண்முன்னே நடக்கும் கொடுமையைத் தட்டிக்கேட்ட அவரால் எங்களுக்கு ஓரளவாவது வாழ்க்கை வசப்பட்டது. வாழ்ந்து கொண்டிருக்கிறோம். காந்தியே விரும்பாத வைக்கம் போரை நடத்தி மக்களை வீதியில் நடக்க வைத்த பெரியாரை உணராத ஜெயமோகன் தலைமுறை ஒரு தலைமுறையா? முறையாக உணரவும் உணர்த்தவும் தெரியாத தலைமுறைக்கு தலையும் மூளையும் தேவையா?

இயல்பாக இயங்கத்தெரியாதவருக்கு "இயல்விருது" தேவையா? நடுவர்கள் எவ்வளவு நடுநிலையோடு இருந்திருக்கிறார்கள் என்பது இப்போது தான் தெரிகிறது. சமுகப்பார்வையே அற்ற ஜெயமோகனுக்கு உலக விருதெல்லாம் ஒவ்வாதுதான். ஆயிரம் ஜெயமோகன்கள் தோன்றி, எழுதி, நோபல் பரிசு பெற்றால் என்ன? பெறாவிட்டால் என்ன?

ஜெயமோகன் எழுதுவதோடு வைத்துக் கொள்ள வேண்டும். மனநோயாளி என்பதை அவ்வப்போது நிரூபிப்பது; நிலைநிறுத்துவது சமுக நலனுக்கு இடையூறானது. மீண்டும் சொல்கிறேன். எந்த ஞானியும் அறிஞரும் நபிகளும் வேதங்களும் மந்திரங்களும் எங்களுக்குத் தேவையில்லை. பசித்தவனைப் பார்க்க இறைவனே ரொட்டி வடிவத்தில்தான் வரவேண்டும்" என்று படித்தது ஞாபகத்திற்கு லேசாக வருகிறது.

எங்களுக்கு வேண்டியது சம உரிமை. ஒழிய வேண்டியது தீண்டாமை. பசிக்கு உணவு. அதற்காக உழைத்தவர் பெரியார். "மனித உரிமைப் போராட்டம் என்பது இடைவிடாத போராட்டம். அதில் இறுதி வெற்றி என்பது கிடையாது" என்று சொன்னவர் அறிவியல் விஞ்ஞானி ல்பர்ட் ஐன்ஸ்டீன்.

சமுக விஞ்ஞானி பெரியார் தொட்ட இடத்திலிருந்து தொடர ஆள்தேவையே தவிர மூட்டை மூட்டையாக எழுதுகிற எழுத்தாளர்கள் தேவையில்லை. நல்ல சம்பளத்தோடு எழுதியும் சம்பாதிக்கும், இன்னும் சினிமாவுக்குத்தாவும் ஜெயமோகன் கொஞ்சம் மோசமான கொழுப்பைக் குறைத்துக் கொள்வது அவரது உடல் ரோக்கியத்திற்கு நல்லது.

வெறும் மேனியன் வைக்கம் பஷீருக்குப் பிடித்த பெரியார், cholestrol கூடிய ஜெயமோகனுக்குப் பிடிக்கவில்லை.. இது கூட ஒரு முரண் அழகுதான். மனிதநேயனனுக்கு ..மதம்...ஜாதி....நாடு ...எல்லை என்பதெல்லாம் இல்லை. மன நோயாளிகளுக்கும்....கலகக்காரர்களுக்கும் வாழ்க்கையில் அமைதியும் நிம்மதியும் எப்போதும் இல்லை.

பட்டுக்கோட்டை சொன்னாரே" சித்தர்களும் யோகிகளும் சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும் உத்தமர் காந்தியும்
எத்தனையோ உண்மைகளை எழுதிஎழுதி வச்சாங்க
எல்லாந்தான் படிச்சீங்க என்னபண்ணிக் கிழிச்சீ¢ங்க"

பெரியாருக்குப் பின் தமிழ்நாட்டில் யாரும் கிழிக்கப் போவதில்லை. பெரியார்போல் கிழித்தவரும் இல்லை. ஜெயமோகன் இன்னும் எழுதிக் கிழிக்காமல் இருந்தால் நன்று. இருப்பதும் நன்று. நன்று.

Pin It