ஆரிய படையெடுப்பிற்கு முன்னர், நாகரிகம் பெற்ற மக்களை கொண்ட நிலமாக இந்தியா இருந்து உள்ளது....பண்டைய, பண்பட்ட இந்தியாவின் வரலாறு எழுதப்படும் முன்னர், ஆரியம் தன்னுடைய வெற்றி வரலாறாய் பூர்வ குடிகளை மண்ணைக் கவ்வ செய்து தன் வரலாற்றின் பக்கங்களை தொடங்கியது....

 உண்மையில் வரலாற்றில் தோல்வி கண்ட இனம், தன் இனத்தின் பெருமைகள் அனைத்தையும் இழந்து, ஆரியத்திடம் இன்றுவரை சரணடைந்து உள்ளது.....

 பண்டைய இந்திய வரலாறு, மத சண்டைகள் மற்றும் படைஎடுப்புகளால் ஆனது....ஒவ்வொரு காலக்கட்டத்திலும் எதிர் நிற்கும் மதம் பவுத்தமாக இருக்கலாம்...சமணம் ஆக இருக்கலாம் ....சைவம், வைணவம், சிறு தெய்வங்கள், இஸ்லாமியம், கிருத்தவம் எதுவாகிலும் இருக்கலாம்....ஆனால், அவை எதிர்க்க முடியாமல் திணறி போனது பார்ப்பனியத்திடம் மட்டும் தான்....

இதற்காக பார்ப்பனியம் கடைப்பிடித்த முறை ஆச்சரியமானது....தன் சொந்த கடவுளர்களை விட்டுக் கொடுத்தது..., சிவன், விஷ்ணுவை இணைத்துக் கொண்டது... வேத காலத்தில் குதிரை, மாடுகளை வேள்வியில் இட்டு உண்ட கூட்டம், பவுத்த மதத்தின் தாக்குதல் தாங்காமல் மரக்கறி உணவிற்கு மாறியது..... தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்த எந்த எல்லைக்கும் சென்றது..... அனைத்து மதங்களையும் ஆரியம் தின்று செரித்ததின் எச்சம் தான் இன்றைய இந்து மதம்....[ கிருத்துவம், இஸ்லாம், சீக்கியம் தவிர]

 பார்ப்பனியம் வெட்ட, வெட்ட வளரக்கூடிய, அழிக்க, அழிக்க மீண்டும் தன்னை புதுப்பித்துக் கொள்ளக்கூடிய தன்மைப் பெறக் காரணம்.... அது, அழியும் தருவாயில் எதிரியின் உருவத்தை உள்வாங்கி தன்னை புதுப்பித்துக்கொண்டு மறுஉருவாக்கம் செய்து கொள்கிறது....

அதனால் தான், பார்ப்பனியத்திற்கு எதிராக திரும்ப வேண்டிய இந்திய மக்கள் தாங்களும் இந்துக்கள் என்று எதிரியின் வரிசையில் போய் நிற்கின்ற அவலம் உண்டானது ...

இந்த பார்ப்பனிய விடக்கிருமி தாக்காத, இந்தியனே இங்கு இருக்க முடியாது...மனு பற்றி தெரியாத இந்துக்கள் அநேகம் இருக்கலாம்....ஆனால், மனு ஸ்மிருதியை தன் வாழ்வின் சட்டமாக கடைப்பிடிக்காத இந்துக்களே இருக்க முடியாது...இந்திய கிருத்தவர்களும், இந்திய இஸ்லாமியர்களும் மனுவை பயன்படுத்தும் சதவீதம் வேண்டுமானால் மாறலாம்....ஆனால், பார்ப்பனியத்திடம் இருந்து அவர்களாலும் தப்ப முடியாது....எடுத்துக்காட்டாக கிருத்தவ மதத்தை பரப்ப வந்த ‘தத்துவ போதசாமிகள்’ தன்னை கிருத்தவ பார்ப்பனர் என்றே அழைத்துக் கொண்டார்....

கிருத்துவ மதத்திலும் வேறு எந்த நாட்டிலும் இல்லாத பொல்லாத சாதி இருக்கின்றதே..... ....இது பார்ப்பனிய மேலாதிக்கத்தால் தானே!....

தன் வீட்டு பெண்ணை அடிமையாக காணும் ஒவ்வொரு இந்தியனின் மனநிலையிலும்....தான் அடிமை தான் என நம்பும் ஒவ்வொரு இந்திய பெண்ணின், மூளை சலவையிலும்..... சாதிய படி நிலையை ஏற்று, அதனைக் கொண்டாடும் ஒவ்வொரு இந்திய மனத்தின் வன்மத்திலும்....தன்னுடைய பண்பாடு, கலாச்சாரம், உணவு, சடங்கு என பார்ப்பனியத்தை ஏற்றுக் கொண்ட அனைத்திலும் .... ஒவ்வொரு இந்தியனின், நாடி, நரம்புகளிலும் நிரம்பி வழிவது பார்ப்பனியம் தானே!....

இந்த சிந்தனைகள் சமூகத்திடம் இருந்து பெற்றதாக இருக்கலாம்...பின்னோக்கி பார்க்க சமூகம், இந்த சிந்தனைகளை தொடர யாரின் சட்டம் சொல்லியது? யார் இவற்றை விடாப்பிடியாக கடைப்பிக்க சொன்னது? யாரும் கட்டாயப் படுத்தாமல் ஒரு இந்தியன் எப்படி சாதியை ஏற்றுக் கொள்கிறான்? மனதளவில் தன்னை தாழ்ந்தவன் என்றும் சாதியால் தான் உயர்ந்தவன் என்றும் உணர்கிறான்? ....அது மனுவின் சட்டம் தானே? ....இவர்கள் இது ‘மனு ஸ்மிருதி’ தொடர்ச்சி என உணராமல் இருக்கலாம்....ஆனால், இன்றைக்கும் இந்த சமூகம் கொண்டாடுவது மனுவின் கேவலமான சட்டத்தை தானே? ....

இந்திய பண்பாடு என குதுகலிப்பது இதைத் தானே ?

 பலவித மக்கள், இனங்கள் உள்ள இந்த நிலப்பரப்பில் ஒரு தேசியம் அமைந்ததே வியப்புக்குரியது....சூழ்நிலைகள் ஏற்படுத்தியது....இன்றைக்கு இந்திய தேசியத்தை ‘’இந்து தேசியமாக’’ மாற்ற விரும்புபவர்கள், வரலாற்றை பின்னோக்கி இந்து மதத்திற்கு எதிராக, இஸ்லாமிய மதத்தையும்...இந்த நாட்டை பாழ்ப்படுத்தியது முகலாயர்கள் படையெடுப்பு என்பதையும் சொல்லக் காண்கிறோம்.....

வரலாற்றை இன்னும் கொஞ்சம் பின்னோக்கி பாருங்கள் ‘’இந்து இந்தியர்களே’’!ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக வந்த ஆரிய படையெடுப்பை முதலில் கணக்கில் கொள்ளுங்கள்....இந்த நாடு ‘ இந்து நாடா? இல்லை வேத[ஆரிய] நாடா? என்பதை உணருங்கள்... தந்திரமான இந்த சாதிய அடுக்கு ஒரு சமூகம் தன்னை மேலாவனாக காட்டிக் கொள்ள... மற்ற சமூகங்களை மோத விடும்....எதிர்ப்பு உணவினை உண்டாக்கும் ....மோசடி திட்டம் ....அதனை உணருங்கள்!....

மக்களின் மனதில் ஊறிக்கிடக்கும் மனுதர்ம சட்டத்தை, அது இழைக்கும் அநீதியை உணருங்கள்!...

இன்றைக்கும் பார்ப்பனியத்தை திட்ட என்ன இருக்கிறது? என்று சொல்லும் இந்தியர்களே ! ...அது எல்லா வழிகளிலும், சிந்தனைகள் வழி இன்றைக்கும் உங்கள் மேல் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை உணருங்கள்...

பார்ப்பனிய சிந்தனைகள் ஒழிப்போம்!

இந்த சிந்தனைகள் மனுவால் பெறப்பட்டது என்பதை அம்பலப்படுத்துவோம்!

காட்டுமிராண்டி கால சிந்தனைகளை விடுத்து கொஞ்சம் நாகரீகம் பெறுவோம் !       

-    கவுதமி தமிழரசன், மேலமெஞ்ஞானபுரம்

Pin It