Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

“இறப்பு என்னைத் தழுவும் இறுதி நாள்வரை அரசியல் உலகத்தில் மீண்டும் அடியெடுத்து வைப்பதில்லை” என வீரமாக சொல்லிவிட்டு அரசியலில் இருந்து ஓடிபோனார் தமிழருவி மணியன். தமிழக மக்களும் ஒரு ஒன்னாம் நம்பர் புரோக்கர் அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்டார் என்று மகிழ்ச்சி அடைந்திருந்தனர். ஆனால் புரோக்காராக அரசியலில் இருந்து ஒதுங்கியவர் நீண்ட ஆலோசனைக்குப் பிறகு இப்போது விபச்சாரியாகவும் மாறி அரசியலில் களம் இறங்கி இருக்கின்றார். புரோக்கர் வேலை பார்த்தால் அரசியலில் கடைசி வரைக்கும் நம்மை புரோக்கர் வேலை மட்டுமே பார்க்க வைத்துவிடுவார்கள், நாம் ஆண்டியாக கடைசியில் நிற்க வேண்டியதுதான் என்பதை 2016 சட்ட மன்ற தேர்தல் மூலம் நன்றாக உணர்ந்துகொண்ட மணியன் அவர்கள் ஒரு சிறிய ஓய்வுக்குப் பின்பு தனது கூச்சத்தை எல்லாம் உதறித் தள்ளிவிட்டு இன்னும் ஒருபடி மேலே போய் ஒரு தேர்ந்த விபச்சாரியாக தனது அரசியல் பயணத்தை தொடங்கியிருக்கின்றார்.

rajini and tamilaruvimanian

தமிழ்நாட்டில் அதிமுகவையும், திமுகவையும் அரசியலில் இருந்தே அகற்றாமல் விடமாட்டேன் என்று சொல்லி சென்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் காவி பயங்கரவாதிகளுக்குக் களம் அமைத்துக் கொடுக்க இங்கிருந்த கழிசடைக் கட்சிகளை எல்லாம் ஒன்றுதிரட்டி ஒரு மானங்கெட்ட கூட்டணியை உருவாக்கினார். அது பெரிதாக சோபிக்க முடியாமல் படு தோல்வி அடைந்தது. அதிமுகவையும், திமுகவையும் ஊழல் கட்சிகள் என்று தனது அறிவுத் திறத்தால் அடையாளம் கண்டுகொண்ட மணியன் அவர்கள் அதற்கு மாற்றாக கண்டுபிடித்தது உலக உத்தம கட்சி பிஜேபியும் அதன் பிரதமர் வேட்பாளர் ‘குஜராத் வளர்ச்சி புகழ்’ மோடியையும் தான். யார் யாருக்கு என்ன தரம் இருக்கின்றதோ, அந்தத் தரத்துக்கு ஏற்பதான் சிந்தனையும் இருக்கும், செயல்பாடும் இருக்கும். ஒரு பார்ப்பான் என்ன தான் தன்னை புனிதவனாக கற்பித்துக் கொண்டாலும் அந்தப் புனிதம் தனக்குத் தவிர மற்ற எந்தச் சாதிக்காரனுக்கும் கிடையாது என்று மார்தட்டிக் கொண்டாலும் எப்படி கோயிலுக்கு வரும் பெண்களையும், மடத்துக்கு அருளாசி வாங்கவரும் பெண்களையும் கருவறையை அந்தப்புரமாக மாற்றி புனிதத்தின் உயர்ந்த நிலையை வெளிப்படுத்துகின்றானோ அதே போலத்தான் மணியனும்.

மணியன் அவர்களின் உயர்ந்த பண்பு என்பது அவரது நேர்மையில் இருப்பதாக அவர் அடிக்கடி பிரகடப்படுத்திக் கொள்வதுண்டு. அந்த நேர்மை எப்படிப்பட்ட நேர்மை என்றால் தேவநாதனின் புனிதத்தைப் போன்றும், சங்கராச்சாரியின் புனிதத்தைப் போன்றும் வெளிப்படையானது. எயிட்ஸ் வந்த பெண்களை வைத்து விபச்சார தொழில் செய்யும் தரகனைவிட மோசமானது.

எதற்கு மாற்றாக எதை முன்வைக்கின்றோம் என்பதில்தான் அது முற்போக்கானதா, இல்லை பிற்போக்கானதா என்பதை முடிவு செய்ய முடியும். சோறு கெட்டுவிட்டது, எனவே அதைத் தின்ன வேண்டாம், அது உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும், அதற்குப் பதிலாக இந்தா இந்த மலத்தைத் தின்னு என்று கொடுத்தால் அது மகா மட்டமான அயோக்கத்தனமான பிற்போக்கு. அதைத்தான் தமிழருவி மணியன் தொடர்ந்து அரசியல் சாணக்கியத்தனம் என்ற பெயரில் செய்து வருகின்றார். அதிமுக, திமுக ஊழல் கட்சிகள் என்றால் அதற்கு மாற்று மலமான பிஜேபிதான். அதைத்தான் அவர் தமிழக மக்களுக்கு கொடுக்க முயன்றார். ஆனால் மானமுள்ள எவனும் மலத்தை தின்ன முன்வர மாட்டான் என்பதை தமிழ்நாட்டு மக்கள் நிரூபித்தார்கள். அதற்குக் கெட்டுப் போன பழைய சோறே பரவாயில்லை என்று முடிவு செய்து திமுகவிற்கும், அதிமுகவிற்கும் வாக்களித்தார்கள். பீயைத் தின்ன சொன்ன அரசியல் சாணக்கியன் மணியனின் கட்சியைச் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் கட்டுத்தொகையை இழக்க வைத்தார்கள்.

ஆனால் பெரியார் சொன்னதுபோல மானமுள்ள ஆயிரம் பேரிடம் மானமுள்ள ஒருவன் பேசி வென்றுவிடலாம். ஆனால் மானமற்ற ஒருவனிடம் ஆயிரம் பேர் பேசினாலும் வெல்ல முடியாது என்பார். அப்படி மானமற்ற தமிழருவி மணியன் இந்தத் தமிழ்நாட்டு மக்களை ஒழித்துக் கட்டாமல் விடமாட்டேன் என்று இப்போது மனித மலத்திற்குப் பதில் தமிழ்நாட்டு மக்களுக்குப் பன்றியின் மலத்தை பரிந்துரைத்து இருக்கின்றார். முன்பு மனித மலத்தின் அருமை பெருமைகளை எல்லாம் தனது ஆன்மிக உள் உணர்வால் கண்டுபிடித்துச் சொன்ன மணியன் இப்போது பன்றியின் மலத்தைப் பற்றி விரிவாக பேச திருச்சியில் ஒரு மாநாட்டையே கூட்டிவிட்டார். இந்த மாநாட்டின் இன்னொரு சிறப்பு என்னவென்றால் இந்த மாநாட்டில் பன்றிக்கறி தின்னும் போராட்ட புகழ் அர்ஜுன் சம்பத்தும் கலந்துகொண்டதுதான்.

இந்த மாநாட்டில் மணியன் பல்வேறு சபதங்களை அள்ளிவீசி இருக்கின்றார். அதில் முக்கியமானது ரஜினையைக் கோட்டையில் அமர்த்துவேன் என்பதும், அதுவரை தான் ஓயப் போவதில்லை என்பதும். தமிழ்நாட்டில் ரஜினிக்கு 25 சதவீதம் வாக்கு வங்கி இருக்கின்றதாம். மேலும் ஒட்டுமொத்த தமிழகமும் ரஜினியின் பின்னால் உள்ளதாம். (இன்று தமிழ்நாட்டில் மாதம் மும்மாரி பொழிந்து நஞ்சையும், புஞ்சையும் செழித்து மக்கள் பணத்தை எல்லாம் என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டில் அடுப்பெரிக்க பயன்படுத்துகின்றார்கள் என்றால் அதற்குக் காரணம் ரஜினியின் ஆசிதான்)

ரஜினி என்ற சினிமா கழிசடை பல வருடங்களாக அரசியலுக்கு வருவேன், அரசியலுக்கு வருவேன் என்று உதார் விட்டுக்கொண்டு இருந்தாலும் அதை மக்கள் ஒரு பொருட்டாக எப்போதுமே எடுத்துக் கொண்டதில்லை என்பதுதான் உண்மை. அதை ஒரு பைத்தியக்காரனின், காரியவாதியின் உளறல் என்ற அளவில்தான் இதுவரை தமிழக மக்கள் பார்த்து வந்திருக்கின்றார்கள். ரஜினிக்கு எப்போதெல்லாம் அரசியல் அரிப்பு ஏற்படுகின்றதோ, அவர் அப்போதெல்லாம் சொறிந்து கொள்வது வழக்கம். என்ன நாமெல்லாம் யாரிடமும் சொறிந்து கொள்வதை சொல்வதில்லை ஆனால் ரஜினி போன்ற ஒரு சினிமா பிரபலம் அதைப் பல பேர் பார்க்க வேண்டும் என்று ஊடகங்கள் முன் சொறிந்து கொள்கின்றார். சினிமா பிரபலங்கள் குசு விட்டால் கூட அதை ஒரு முக்கிய செய்தியாக எழுதும் விபச்சார ஊடகங்கள் இந்தக் கழிசடையின் வெற்று உளறல்களை எல்லாம் பத்திரிக்கை சர்குலேசனை அதிகம் செய்ய வேண்டும் என்ற ஈனத்தனத்தால் பிரசுரித்து, மக்களை முட்டாள்கள் ஆக்க முயன்றன. இல்லை என்றால் இந்தக் பைத்தியக்காரனின் உளறலை ஒரு நாய்கூட தமிழ்நாட்டில் கேட்டிருக்காது என்பதுதான் உண்மை.

ஆனால் ஒன்றுமே இல்லாவதனுக்குக் கோவணமே ஒரு பெரிய சொத்து என்பதுபோல அரசியலில் அநாதையாக அன்னக்காவடியாக சுற்றிக் கொண்டிருக்கும் மணியனுக்கு இந்தச் சினிமா கழிசடையே இப்போதைக்குத் தன்னை பிரபலப்படுத்திக் கொள்ள இருக்கும் ஒரே வழி. அதனால்தான் சம்பந்தப்பட்ட ரஜினியே தன்னுடைய தொழில் பாதிக்கப்படக் கூடாது என்று காலா படப்பிடிப்பில் மும்முரமாக கலந்துகொண்டு கல்லா கட்டுவதற்கு வேலை செய்து கொண்டிருக்கும் போது வீட்டில் வேலைவெட்டி இல்லாமல் சும்மா விட்டத்தைப் பார்த்துக் கொண்டு படுத்துக்கிடந்த அல்லக்கை அரசியல்வாதியான மணியன் திருச்சியிலே அரசியல் விழிப்புணர்வு மாநாடு என்ற பெயரில் ஒன்றை கூட்டி ரஜினியின் அரசியல் பிரவேசத்தை அறிவிக்கின்றார். கூடவே தன்னுடைய ராமராஜ்ஜியத்துக்கு உதவியாக நான்காம் தர அரசியல் கழிசடை அர்ஜுன் சம்பத்தையும் சேர்த்துக் கொண்டிருக்கின்றார்.

ஊழல் என்ற ஒற்றைக் காரணத்தை முன்வைத்து மட்டுமே யாரும் மாற்று அரசியல் கோரிக்கைகளை முன்வைப்பதில்லை. ஊழல் என்பதை உலகமயம், தனியார்மயம், தாராளமயம் போன்றவற்றில் இருந்து தனியே பிரித்து ஒரு தனிப்பட்ட சக்திகொண்ட சொல்லாக மாற்றுவது என்பது ஊழல் என்பதன் முழுமையான பொருளை அரசியல் நீக்கம் செய்வது. ஆயிரக்கணக்கான கோடி கருப்புப் பணம் புழங்கும் திரைத்துரையில் இதுவரை ரஜினி கருப்புப் பணத்திற்கு எதிராக எப்போதாவது பேசி இருக்கின்றாரா? இல்லை தன்னுடைய சம்பளத்தை வெளிப்படையாக சொல்லி இருக்கின்றாரா? தான் கருப்புப் பணத்தை இதுவரை கை நீட்டி வாங்கியதில்லை என்று ரஜினியால் சொல்ல முடியுமா? இது எல்லாம் இயல்பாக அனைவருக்கும் எழும் கேள்விகள். குறைந்தபட்சம் இதற்குக் கூட ரஜினியிடம் நேர்மையான பதில் இருக்காது என்பதுதான் உண்மை.

ஆனால் மணியன் போன்ற அரசியல் விபச்சாரிகளுக்கு அதைப் பற்றி எல்லாம் கவலை கிடையாது. தன்னுடைய நாவன்மையால் யாரை வேண்டும் என்றாலும் அவரால் புனிதப் படுத்தவோ இல்லை புனித நீக்கம் செய்யவோ முடியும். கொள்கை பற்றியோ, கோட்பாடு பற்றியோ அவருக்கு எந்தக் கவலையும் கிடையாது. கேட்டால் ‘மற்றவர்களுக்கு எல்லாம் அது இருக்கின்றதா’ என்று நம்மிடமே எதிர்க்கேள்வி கேட்பார். அவரைப் பொறுத்தவரை ஊழல்தான் பிரச்சினை மற்றபடி தனியார் மயத்தைப் பற்றியோ தாராளமயத்தைப் பற்றியோ மதவாதத்தைப் பற்றியோ, இல்லை சாதியவாதத்தைப் பற்றியோ எந்தக் கவலையும் கிடையாது. இது எல்லாம் அவரைப் பொறுத்தவரை இயல்பான நிகழ்ச்சிப் போக்குகள். பன்னாட்டு முதலாளிகளுக்கு, தரகு முதலாளிகளுக்கு மாமா வேலை பார்க்க வேண்டும் ஆனால் அதற்காக கைநீட்டி கமிசன் வாங்கக் கூடாது, ரஜினி இமயமலைக்குப் போனாலும் அம்மணகுண்டி சாமியர்களை வணங்கினாலும் அவர் ஒரு மதவாதி கிடையாது என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும் இதுதான் மணியன் அவர்களின் நிலைப்பாடு.

தமிழருவி மணியன் ஒரு கேடுகெட்ட பிழைப்புவாதி, அரசியல் விபச்சாரி, தமிழ்நாட்டில் ரஜினியை வைத்து மறைமுகமாக மீண்டும் காவி பயங்கரவாதிகளுக்குக் களம் அமைத்துக் கொடுக்க கங்கணம் கட்டிக்கொண்டு அதற்காக சூடு சுரணை இன்றி தரகுவேலை பார்க்கும் சுயமரியாதை அற்றவர். இந்த வேலை பார்ப்பதற்கு எதற்கு மணியன் அவர்கள் வெள்ளையும் சொள்ளையுமாக இருக்க வேண்டும் என்று தெரியவில்லை. பேசாமல் காவிக்கு மாறிவிடலாம். அயோக்கியர்களின் நிரந்தர அடையாளம் காவிதான். தமிழகத்தில் ஒரு உலகம் போற்றும் அரசியல் விபச்சாரியாக தமிழருவி மணியன் இருந்தார் என்று நாளை நிச்சயம் வரலாறு சொல்லும்.

- செ.கார்கி

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

0 #1 மணி 2017-08-24 23:04
supero super!
Report to administrator
0 #2 marthandan 2017-09-03 12:30
Romba arumaiyana varnanai tholar
Report to administrator

Add comment


Security code
Refresh