சில தினங்களுக்கு முன்னாள் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை காயத்ரி ரகுராம் நடிகை ஓவியாவை பார்த்து சேரி பிஹேவியர் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். இதனால் சமூக வலைதளங்களில்  காயத்ரி ரகுராமுக்கு எதிராக பெரும் கண்டனங்கள் எழுந்தன. அது எப்படி அவர் சேரி பிஹேவியர் என்ற வார்த்தையைப் பயன்படுத்தலாம்  அவர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று. காயத்ரி ரகுராம் பயன்படுத்திய சேரி பிஹேவியர் என்ற வார்த்தை ஏதோ புதிதாக அவரால் கண்டுபிடிக்கப்பட்ட வார்த்தைக் கிடையாது. இது காலம் காலமாக சமூகத்தில் அதுவும் குறிப்பாக மேல்தட்டு வர்க்கத்தின் மத்தியிலும், பார்ப்பன, சூத்திர ஆதிக்க சாதிகளின் மத்தியிலும் இது போன்ற வார்த்தைகள் பெரிய அளவில் புழக்கத்தில் இருந்து வந்ததுதான்.

bigg boss gaya kamal main

சேரி என்பது பொதுவாக சாதி ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மிகவும் கீழ்நிலையில் உள்ள மக்கள் ஒரே இடத்தில் வாழும் பகுதி. எனவே சேரியைப் பற்றிய அக்கிரகார மனங்களின் பார்வையில் அது மிகவும் அசுத்தமான, படிப்பறிவில்லாத, இழிவான சிந்தனைகொண்டவர்களின் இருப்பிடம். எப்படி சேரிகென்றே சில பிரத்தியோகமான குண நலன்கள் அதாவது தூய்மையற்ற அசிங்கம்பிடித்த, தீண்டத்தகாத மக்கள் வசிக்கும் பகுதி என்பதாய் அக்கிரகார சிந்தனையில் பதிவாகியிருக்கின்றதோ அதே போல அவர்கள் காசுக்காக எதை வேண்டும் என்றாலும் செய்யும் குற்றக்கும்பல் என்பதாயும் அநாகரிகமான மொழிகளையும், பண்பாடுகளையும் கடைபிடிப்பவர்கள் என்பதாயும் பதிவாகியிருக்கின்றது. அதனால் தான் தன்மனதில் சேரியைப் பற்றி உருவாக்கிவைத்திருக்கும் பிம்பத்தை நேரில் தரிசிக்க நேர்ந்தால் அதைக் குறிக்க சேரி பிஹேவியர் போன்ற வார்த்தைகள் இயல்பாகவே பார்ப்பன, சூத்திர ஆதிக்க சாதிகளால் பயன்படுத்தப்படுகின்றன.

ஆனால் சேரி பிஹேவியர் என்பதாய் ஒன்று இருக்கத்தான் செய்கின்றது. அது அக்கிரகார பிஹேவியருக்கு நேர் எதிரானது. வாழ்க்கையில் மிக கீழ்நிலையில் இந்த சமூகம் அவர்களை திட்டமிட்டே வைத்திருந்தாலும் அவர்கள் தினம் தினம் எதிர்கொள்ளும் மக்களிடம் அவர்கள் எந்தச் சாதியாக இருந்தாலும் அன்பைத்தவிர வேறு எதையுமே அவர்கள் வெளிக்காட்டுவதில்லை. தனக்குக் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் கூட அவர்களால் இயல்பாய் மகிழ்ச்சியாய் வாழமுடிகின்றது. குறிப்பாக சேரி பெண்களின் போர்குணம் என்பது அக்கிரகார ஆணாதிக்க சூழலில் கட்டுப்பெட்டித்தனமாக வாழும் மடிசார் மாமிகள் அறியாதது. ஆண்களை மிக இயல்பாய் எதிர்கொள்ளும் அவர்களின் குணம் அவர்களின் வாழ்வியல் முறை அவர்களுக்கு இயற்கையாகவே கொடுத்திருக்கின்றது. தம்பி என்றும், அண்ணா என்றும், அப்பா என்றும், அம்மா என்று  அனைத்துச் சாதி மக்களையும் பேதமற்று விளிக்கும் அவர்களின் கள்ளம் கபடமற்ற உள்ளம் உள்ளபடியே அக்கிரகார பிஹேவியர் என்றுமே அறியாதது. ஏனெனில் அக்கிரகார பிஹேவியர் என்பது ஒரு எண்பது வயது உள்ள தாழ்ந்த சாதி மனிதரைக் கூட  ‘டே’ என்று விளிக்கக்கூடியது.

எனக்குத் தெரிந்து எந்தச் சேரி மக்களும் தன்வீட்டிற்கு வரும் மனிதர்களை சாதி பார்த்து உள்ளே வரச்சொல்வதும் அவர்கள் ஆதிக்க சாதியாக இருந்தால் மட்டுமே வீட்டில் சாப்பிடச்சொல்வதும் இல்லை. அவர்கள் மனிதர்களை மனிதர்களாக மட்டுமே பார்க்கின்றார்கள். மனிதம் எவ்வளவு அழகானது என்பதும் அது எப்படி மனித மனங்களை மனம்கமழ வைக்கின்றது என்பதையும் நாம் சேரிகளில் இருந்து கற்றுக்கொள்ளலாம். அவர்கள் இயல்பாக வாழ்கின்றார்கள். ஒரு நாளும் இயல்பை மீறி தன்மீது சமூகம் கற்பித்திருக்கும் கற்பிதங்களை தன் மண்டைக்குள் புகுத்திக்கொண்டு நீ உயர்ந்தவன் நீ தாழ்ந்தவன் என்று அவர்கள் வேறுபாடுகள் பார்ப்பதில்லை. அதனால் சேரி பிஹேவியர் என்ற ஒன்று நிச்சயமாய் இருக்கின்றது என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் சேரி பிஹேவியரைப் பற்றி நன்றாக தெரிந்திருந்தால் தான் நம்மால் அருவருப்பான அக்கிரகார பிஹேவிரை பற்றி தெரிந்துகொள்ள முடியும். மலர்களின் நறுமணத்தை தன் வாழ்நாளில் நுகர்ந்து பார்க்காதவன் மலத்தின் நாற்றத்தையே சிறந்தது என்று நினைத்துக்கொண்டிருப்பான்.

அது என்ன அக்கிரகார பிஹேவியர்?. இன்று பார்ப்பன, சூத்திர சாதி மக்கள் கடைபிடிக்கும் அனைத்துப் பழக்க வழக்கங்களுமே அக்கிரகார பிஹேவியர்தான். அது தான் தன்சக மனிதனை சாதி ரீதியாக பார்த்து பார்த்து பேசவும் யாரை  நண்பனாக வைத்திருக்க வேண்டும், யாரை சார் என்று கூப்பிடவேண்டும், யாரை வாங்க போங்க என்று கூப்பிடவேண்டும், யாரை பேர் சொல்லி கூப்பிட வேண்டும், யாரை நீ, வா, போ என்று ஒருமையில் கூப்பிடவேண்டும் இல்லை யாரை வாடா, போடா, ஏய் என்று கூப்பிட வேண்டும் என்று எல்லாவற்றையும் தீர்மானிக்கின்றது. அந்தப் பார்ப்பன பிஹேவியர் தான் சைவம் சாப்பிடுவதை பெருமையாகவும் அசைவம் தின்பதை கீழ்த்தரமான உணவு பழக்கமாகவும் கருதவைக்கின்றது. அதுதான் இட ஒதுக்கீடு தேவையில்லை என்று போராடவைக்கின்றது. அதுதான் மாட்டு மூத்திரத்தையும், மாட்டு சாணியையும் தின்னவைக்கின்றது, அதுதான் சொல்லப்போனால் மோடிக்கு ஓட்டுகூட போட வைக்கின்றது.

அக்கிரகார பிஹேவியரும், சேரி பிஹேவியரும் எப்போதுமே வரலாற்றில் நேர் எதிரான நிலையில் தான் இருந்து வந்திருக்கின்றது. சேரி பிஹேவியர் என்பது இந்த மண்ணின் 97 சதவீதம் உள்ள பூர்வகுடிகளின் பிஹேவியர். ஆனால் அக்கிரகார பிஹேவியர் என்பது இந்தியாவிற்குள் வந்தேறிகளாக வந்த 3 சதவீதம் இருக்கும் பார்ப்பன கும்பலின் பிஹேவியர். நாம்  எல்லா மனிதர்களையும் தன்னுடைய சகோதரனாக பார்க்கும் 97 சதவீத மக்களின் பிஹேவியரைக் கடைபிடிக்கின்றோமா இல்லை தன்னுடைய சக மனிதனை சூத்திரன் என்றும் தாழ்த்தப்பட்டவன் என்றும் பஞ்சமன் என்றும் அசிங்கப்படுத்தி அதன் மூலம் சமூகத்தில் தன்னை எப்போதுமே மேல் நிலையில் வைத்துக்கொண்டு மீதமுள்ள 97 சதவீத மக்களை முட்டாள்கள் ஆக்கி தன்னை வளப்படுத்திக்கொள்ளும் அக்கிரகார பிஹேவியரைக் கடைப்பிடிக்கின்றோமா என்பதுதான் முக்கியம்.

காயத்ரி ரகுராம் போன்ற பிஜேபி கழிசடைகளின் வாயில் இருந்து வேறு எந்தவிதமான வார்த்தைகளையும் நாம் எதிர்ப்பார்க்க முடியாது. அது பாப்பாத்திகளின் டிஎன்ஏவிலே உள்ளது. அதுதான் எச்சிகலை ராஜாவை போராடும் மக்களை நக்சலைட்டுகள் என்று சொல்லவைப்பது. அதுதான் சு.சாமியை தமிழர்களைப் பார்த்து பொறுக்கிகள் என்று சொல்லவைப்பது. அதுதான் இல.கணேசனை தமிழ்நாட்டை தியாகம் செய்யலாம் என்று சொல்லவைப்பது.

நாம் இது போன்ற அக்கிரகார பிரிவினைவாத பார்ப்பன கும்பலிடம் இருந்து நம்மை விடுவித்துக்கொள்வதும் அவர்களின் கீழ்த்தரமான புராண புளுகுகளையும், அதை வைத்து தனக்கு இந்தச் சமூகத்தில் சிறப்புரிமை கேட்கும்  அவர்களின் அக்கிரகார பிஹேவிருக்கும் சரியான பதிலடி கொடுப்பதும்தான் நாம் சேரி பிஹேவியரை தழுவிக்கொள்ள முன் நிபந்தனையாகும்.

நாம் மனிதர்களாக இன்னும் சொல்லப்போனால் உண்மையான தமிழர்களாக வாழவேண்டும் என்றால் நமது பண்பாடான சேரி பிஹேவியரை ஏற்றுக்கொள்வதும் அக்கிரகார பிஹேவியரை அருவருப்பாக உணர்ந்து ஒதுக்குவதும் மிக முக்கியமாகும். இங்கிருக்கும் பார்ப்பன கழிசடைகளுக்குச் “சேரி பிஹேவியரே எங்கள் பிஹேவியார் உன் அக்கிரகார பிஹேவியர் கொழுப்பெடுத்த நன்றிகெட்ட இன துரோகிகளின் பிஹேவியர்” என்று உரத்துச்சொல்வோம்.

 - செ.கார்கி

Pin It