இந்திய விவசாயிகளின் மனதில் கனன்று கொண்டிருந்த நெருப்பின் முதல் பொறி மத்திய பிரதேசத்தின் மீது விழுந்து அந்த மாநிலத்தை ஆளும் பிஜேபியை வாட்டிக்கொண்டு இருக்கின்றது. பொருமையின் எல்லை என்பது வன்முறை என்பதை மத்திய பிரதேச விவசாயிகள் நிரூபித்துக் காட்டியிருக்கின்றார்கள். என்ன செய்தாலும் விவசாயிகள் ஆளும் வர்க்கத்திற்கு எதிராக திரளமாட்டார்கள் அப்படியே திரண்டாலும் நாலுகத்துக் கத்திவிட்டு வீடு போய் சேர்ந்துவிடுவார்கள் என்று விவசாயிகளை மிக மட்டமாக மலிவாக எடைபோட்ட ஆளும் வர்க்கத்தின் திமிர்பிடித்த பார்வையில் நெருப்பைப் பற்றவைத்திருக்கின்றார்கள் ம.பி விவசாயிகள். இந்த நெருப்பு இந்தியா முழுவதும் பரவவேண்டும், ஏறக்குறைய முன்று லட்சம் விவசாயிகளைக் கொன்று போட்டுவிட்டு அதைப் பற்றி எந்தக் கவலையும் அற்று பன்னாட்டு முதலாளிகளின் காலை நக்குவதை மட்டுமே தனது தொழிலாக செய்துவரும் இந்திய ஆளும்வர்க்கத்தின் அடித்தளத்தை அடியோடு பெயர்த்தெடுக்க வேண்டும். விவசாயிகளை ஒரு மனித பிறவியாகவே மதிக்காத மலம்தின்னிகளை இனி நடக்கப்போகும் விவசாயிகளின் பெரும் போராட்டங்கள் இந்தியாவை விட்டே விரட்டியடிக்க வேண்டும்.

 ஆளும்வர்க்கம் எவ்வளவு கேவலமானது என்பதையும் அது நியாயமான கோரிக்கைகளை முன்வைத்துப் போராடும் விவசாயிகளை எப்படி அடக்கி ஒடுக்கும் என்பதையும் மத்திய பிரதேச அரசின் ஈனத்தனமான செயல் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கின்றது. விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், வேளாண் விளைபொருட்களை அரசு நியாயமான விலையில் கொள்முதல் செய்யவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மாதம் 1 ஆம் தேதிமுதல் மத்தியபிரதேச விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர். விவசாயிகளின் இந்த நியாயமான கோரிக்கையைச் செவிகொடுத்துக்கூட கேட்க துப்பில்லாத மானங்கெட்ட பிஜேபி அரசு தனது போலீஸ் கூலிப்படைகளை ஏவிவிட்டு ஐந்து விவசாயிகளை சுட்டுக்கொன்றிருக்கின்றது. அத்தோடு அல்லாமல் அவர்களுக்கு வன்முறையாளர்கள் என்றும் பெயர்சூட்டி இருக்கின்றது. விவசாயிகள் வன்முறையாளர்கள் என்றால் கடந்த 2001 முதல் 2015வரை மத்திய பிரதேசத்தில் 18687 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளனர். இதில் பெரும்பகுதி பிஜேபியே ஆட்சி செய்துள்ளது. மத்திய பிரதேசத்தில் பிஜேபி மூன்றாவது முறையாக தற்போது ஆட்சியை கைப்பற்றி இருக்கின்றது. அப்படி என்றால் இத்தனை பேரின் மரணத்துக்குக் காரணமான பிஜேபி அயோக்கியர்களை என்ன பெயரிட்டு அழைப்பது.

 மாட்டு மூத்திரத்தைக் குடித்து மாட்டு சாணத்தை தின்று அதைப் புனிதம் என்று கன்னத்தில் போட்டுக்கொள்ளும் கேடுகெட்ட முட்டாள் கூட்டம் விவசாயிகளை இவ்வளவு அருவருப்பாக நடத்துகின்றது என்றால் அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. தர்ம சாஸ்திரங்கள் பார்ப்பன தொந்திவான்களை விவசாயத்தில் ஈடுபடுவதைப் புனிதமற்ற அருவருப்பான செயலாக பிரகடனப்படுத்துக்கின்றது. பார்ப்பான் பிச்சை எடுத்துச் சோறு தின்னாலும் தின்பானே ஒழிய விவசாய நிலத்தில் எப்பொழுதும் உழைக்கமாட்டான். அரசர்களுக்குக் கால்வழிமரபுகள் உருவாக்கி அவனிடம் பிச்சையாக வாங்கிய இறையிலி நிலங்களில் சூத்திரர்களைக்கொண்டே அதுவும் ஊதியமற்ற உழைப்பை வாங்கி, உண்டு கொழுத்த கூட்டத்தின் சித்தாந்தம் உழைப்பவனை வேசி மகன் என்று எழுதிவைக்கும் பார்ப்பன கொழுப்பை இந்த அயோக்கியர்களுக்குக் கொடுத்து இருக்கின்றது. அந்தக் கொழுப்புதான் இன்று விவசாயிகளை சுட்டுக்கொல்லவும் சுட்டுக்கொன்றுவிட்டு அவர்களை வன்முறையாளர்கள் என்று அவதூறு செய்யவும் இந்தப் பார்ப்பன கைக்கூலிகளுக்குத் தைரியத்தைக் கொடுக்கின்றது.

  ஆனால் இவ்வளவு அயோக்கியத்தனத்தையும் செய்துவிட்டு சிவராஜ் சிங் சவுகான் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் உண்ணாவிரதம் இருக்கின்றார். யாரை ஏமாற்ற இந்த உண்ணாவிரதம் என்று தெரியவில்லை. சொந்த மாநில விவசாயிகளைக் காக்கைக் குருவிகள் போன்று சுட்டுத்தள்ளிவிட்டுத் தன்னை யோக்கியவானாக காட்டிக்கொள்ள இந்தப் பிஜேபி விஷ பூச்சி உண்ணாவிரத நாடகம் ஆடுகின்றது. அதையும் தற்போது முடித்துக்கொண்டு விட்டது. நல்லவன் வேசமெல்லாம் எப்போதுமே இந்தப் பார்ப்பன அடிவருடி பயங்கரவாத கும்பலுக்கு எடுபடுவதில்லை. மத்திய பிரதேசத்தில் மட்டும் அல்லாமல் விவசாயிகளை கொன்று போடுவதில் பிஜேபி ஆளும் மகாராஷ்டிரா மாநிலமும் தொடர்ந்து இந்தியாவில் முதல் இடத்தில் இருந்து வருகின்றது. 2015 ஆம் ஆண்டு நாடுமுழுவதும் தற்கொலை செய்துகொண்ட 12,602 விவசாயிகளில் மகாராஷ்டிராவில் மட்டும் 4291 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளனர். இது தான் விவசாயிகளைப் பணக்காரர்களாக மாற்றும் மோடி அரசின் செயல்பாடு.

 மோடி அரசு பதவியேற்றதில்  இருந்து உருப்படியாக விவசாயிகளுக்கு ஏதாவது செய்திருகின்றதா என பார்த்தோம் என்றால் ஒரு வெங்காயமும் கிடையாது. மோடி ஐந்து பைசாவுக்கு பெருமானம் இல்லாமல் ஊர் சுற்றிய விமான செலவை இந்திய விவசாயிகளுக்குக் கொடுத்திருந்தார் என்றால் கூட ஆயிரக்கணக்கான விவசாயிகளின் மரணத்தை தடுத்திருக்க முடியும். தன்னுடைய கோட்டுக்காகவும், தன்னுடைய ஆடம்பர அலங்காரங்களுக்காகவும் பல லட்சங்கள் செலவு செய்ய மனமிருக்கும் மோடிக்கு கோவணம் கூட மிஞ்சாமல் இந்த நாட்டுக்காக உழைத்துத் தேய்ந்துபோன ஏழை விவசாயிகளை வாழ்விக்க செலவு செய்ய மனம் வரவில்லை.

  மோடி அரசு பதவியேற்ற இந்த மூன்று ஆண்டுகளில் இந்தியா முழுவதும் ஏறக்குறைய  35 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார்கள். இந்த லட்சணத்தில் 2022 க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக உயர்த்தப் போகின்றோம் என உச்சநீதி மன்றத்தில் மோடி அரசு தெரிவித்து இருக்கின்றது. 2022 வரையும் மோடியை இந்தியாவை ஆட்சி செய்யவிட்டால் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகின்றதோ இல்லையோ நிச்சயம் இந்தியாவில் விவசாயி என்ற ஒரு வர்க்கத்தையே இல்லாமல் செய்துவிடுவார்.

  இந்தியா முழுவதும் விவசாயிகளின் தற்கொலை என்பது தினம் தினம் ஒரு வாடிக்கையான சம்பவமாகவே மாறிவிட்டது. பெரும் முதலாளிகளுக்கு லட்சக்கணக்கான கோடிகள் மானியமாக வழங்கும் அரசு, அவர்கள் வங்கிகளில் வாங்கிய கடனை கட்டாமல் ஏமாற்றிய போதும் வராக்கடன் என்று சொல்லி அதை தள்ளுபடி செய்த அரசு விவசாயிகள் கடனை கட்டமுடியாமல் தற்கொலை செய்துகொண்டு கொத்துக்கொத்தாய் மாளும் போதும் எந்தவித அசைவும் இன்றி சாணிப்பிள்ளையாரை போன்று சலனமற்று இருக்கின்றது. இந்தியாவில் விவசாய துறையில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளின் எண்ணிக்கையை உலகவங்கியின் வழிகாட்டுதல்படி குறைக்க அவர்களைத் தானாகவே கடன்சுமையால் சாகவிட்டு தனது உலக வங்கியின் அடிமை நாய் புத்தியைக் காட்டுகின்றது.

 மோடி பதவி ஏற்ற இந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் எத்தனை நதிகள் இணைக்கப்பட்டுள்ளது என்று பிஜேபி கைக்கூலிகளால் சொல்ல முடியுமா? குறைந்தபட்சம் இந்தியாவில் இருக்கும் ஏரி குளங்களாவது முழுவதுமாக தூர்வாரப்பட்டு விவசாயிகளுக்குப் பயன்படும் வகையில் மாற்றப்பட்டிருக்குமா?  ஊர் சுற்றுவதற்கும், மினுக்குவதற்குமே நேரம் போதாமல் தவிக்கும் மோடியால் எப்படி விவசாயிகளின் பிரச்சினைகளைப் பற்றி சிந்திக்க நேரம் இருக்கும். சரி வேலையில்லாத ஓய்வு நேரத்திலாவது நம்ம விவசாயிகளின் பிரச்சினை பற்றி நினைத்துப் பார்ப்பாரா என்று நாம் எதிர்ப்பார்த்தால் முதலாளிகளின் காலை நக்கியது போக தனக்கு ஓய்வாக கிடைக்கும்  சில மணித்துளிகளையும் அவர் பிரியங்கா சோப்ராவை சந்திப்பதற்கும், கவுதமியை சந்திப்பதற்கும் செலவிட்டு விடுகின்றார்.பிரியங்கா சோப்ராவுக்கும், கவுதமிக்கும் அருள்பாளிக்கும் மோடி ஏழை விவசாயிகள் அம்மணமாக போராட்டம் நடத்தினால் கூட கண்டுக்க மாட்டேன் என்கின்றார்.

 எனவே விவசாயிகள் அம்மணமாக போராடுவது, மொட்டை அடித்துக்கொள்வது, மீசையை மழித்துக்கொள்வது , பிச்சை எடுப்பது போன்ற போராட்ட முறைகளைக் கையில் எடுத்து ஆளும்வர்க்கத்துக்குச் சிரிப்பு மூட்டுவதை விட்டுவிட்டு மத்திய பிரதேச விவசாயிகள் போன்று கொல்லிக்கட்டையை எடுத்துப் போராட்டம் செய்ய முற்பட வேண்டும். விவசாயிகளுக்குக் கலப்பையை மட்டும் அல்ல உருட்டுக் கட்டைகளையும் பிடிக்கத் தெரியும் என காட்டவேண்டும். மத்திய பிரதேச விவசாயிகளின் இந்தப் போராட்டத்தை இந்தியாவில் உள்ள மற்ற மாநில விவசாயிகளும் ஒரு முன் உதாரணமாக எடுத்துக்கொண்டு தங்கள் வாழ்க்கையை அழித்து நாசப்படுத்தும் ஆளும்வர்க்க அயோக்கியர்களுக்கு எதிராக அணிதிரள வேண்டும். அப்படி ஒரு போராட்டத்தைத்தான் இன்று நாடே எதிர்ப்பார்த்துக் காத்துக்கிடக்கின்றது.

- செ.கார்கி

Pin It