JENARAL TYRE1 350பார்த்தா சாட்டர்ஜி  – சமூக அறிவியலாளர்- வரலாற்றியலாளர்

1919ல் பஞ்சாப்பில் பிரிட்டிஷ் இந்திய ராணுவம் முன்னெடுத்துச்சென்ற நடவடிக்கைகளுக்கும், இன்று கஷ்மீரில் இந்திய ராணுவம் மேற்கொண்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் இடையே உறையவைக்கும் ஒற்றுமைகள் உள்ளன.

“இது எனது கடமை – எனது கொடூரமான, அசிங்கமான கடமை” அந்த ராணுவத்தளபதி விளக்கமளித்தான்.”மிகவும் கசப்பான மற்றும் கொடூரமான இந்தக்கடமையைச் செய்வதா? அல்லது ஒழுங்கீனத்தை அடக்குவது அல்லது எதிர்காலத்தில் சிந்தப்போகும் எல்லா ரத்தப்பெருக்குக்கும் பொறுப்பேற்கும் எனது கடமையை நிராகரிப்பதா? என்ற விருப்பத்தேர்வு என்னிடம் இருந்தது. அது வெறுமனே கூட்டத்தைக் கலைக்கும் பிரச்சனையாக மட்டும் இருக்கவில்லை: ராணுவத்தின் கண்ணோட்ட்த்தில் அங்கே இருந்தவர்கள் மீது மட்டுமல்ல: மிகவும்குறிப்பாக, பஞ்சாப் முழுவதும் தேவையான அளவுக்கு மனதளவிலான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் இருந்தது. மட்டுமீறிய கொடூரத்தை ஏற்படுத்துவது பற்றிய எந்தமான கேள்விக்கும் இடமில்லை.”

 இவை இந்திய வரலாற்றில் “பஞ்சாப்பின் கசாப்புக்காரன்” என்று அறியப்பட்ட (தற்காலிக) பிரிகேடியர் ஜெனரல் ரெஜினால்ட் டயரின் வார்த்தைகள். அவன் தனது 1919 ஏப்ரல் உத்தரவுகளின்படி, நிராயுதபாணிகளாக 20,000 பேர் ஜாலியன்வாலாபாக்கில் கூடியபோது, அவனது துருப்புக்கள் 10 நிமிடங்களில் 650 சுற்றுக்கள் சுட்டதை நியாயப்படுத்தினான். அதிகாரபூர்வ எண்ணிக்கையின்படி 379 பேர் கொல்லப்பட்டார்கள்: ஆனால், உள்ளூர் தகவல்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் என்று தெரிவித்தன. இந்த நிகழ்வுகள் இந்தியாவின் தேசிய அரசியலில் ஏற்படுத்திய விளவுகள் நினைவில் நிலைத்திருக்கும்வகையில் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பள்ளிக் குழந்தைக்கும் தெரியவந்துள்ளது.

இனிமையற்ற ஒரு பிரதிபிம்பம்

ஒருவர் கண்ணாடியில் பார்க்கும்போது சிலசமயங்களில் அடையாளம் காணமுடியாத ஒருமுகத்தை- மிகமோசமான ஒருபுதியவனின் அருவருப்பான முகத்தைக் காணும்போது அதிர்ச்சி அடைகிறார். தேசிய இன்ங்களின் ஒரு அரசாக நாம் இப்போது ஜெனரல் டயரின் காலத்துக்கு வந்துவிட்டோம் என்பதை பெரும்பாலான இந்தியர்களுக்கு நம்புவது கடினமாக இருக்கும். ஆனால், கவனமானதும்,தனித்தும்காணப்படும் பிரதிபலிப்பு, 1919ல் பஞ்சாப்பில் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகளை நியாயப்படுத்த முன்வைக்கப்பட்டவற்றுக்கும், இன்று - ஒரு நூற்றாண்டுக்குப்பிறகு- கஷ்மீரில் இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகளை நியாயப்படுத்து முன்வக்கப்படுவனவற்றுக்கும் இடையே நம்மை உறையவைக்கும்வகையில் ஒத்த்தன்மை இருப்பதைக் காட்டுகின்றன.

  ஜாமு-கஷ்மீரில் அண்மையில் ஒரு இடைத்தேர்தலின்போது –அதில் 7% வாக்குகளே பதிவாயின – ஒரு வாக்குச்சாவடியின்மீது கற்களை வீசும் கூட்டத்திலிருந்து பாதுகாப்பளிக்க அழைக்கப்பட்ட மேஜர் லீதுல் கோகாய், பாதுகாப்புப்படைகளின்மீது கூட்டத்தினர் கல்வீசுவதைத் தவிர்ப்பதற்காக, மோட்டர்பைக்-கில் சென்றுகொண்டிருந்த தர் என்பவரை ராணுவஜீப்பின் முன்பகுதியில் கட்டி தெருக்களில் அணிவகுப்பாக ஓட்டிச்சென்றார். இந்த நிகழ்வின் ஒளிப்படக்காட்சிகள் ஏப்ரல் 14 அன்று – ஜாலியன்வாலாபாக் படுகொலைகளை உலகம் அறிந்துகொண்ட  அதே நாளில்- ஊடகங்களில் சுற்றுக்கு விடப்பட்டு பரவின. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் கேள்விகளைக் கேட்கத்துவங்கினார்கள். எனவே,பின்வாங்கிய ராணுவம் ஒரு நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட்டது. ஆனால், அதனுடைய அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்பே ஜெனரல் பிபின் ராவத் உள்நுழைந்து, கஷ்மீரில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் கோகாய் ஆற்றிய தனிப்பட்ட சேவைகளைப் பாராட்டி ஒரு நற்சான்றிதழ் வழங்க முன்வந்தார்.

  அதைத்தொடர்ந்து ராவத் ஒரு பத்திரிக்கை நேர்காணலில் மேஜர் கோகாயின் உத்திகளை, அவர் கையாண்ட வழிமுறைகளை ”ஏதோ தவிர்க்கவேண்டிய ஒன்று அல்ல: ராணுவத்தின் பயணமுறைகளில் உருவான புதியகட்டத்தின் பகுதிகளில் ஒன்றுதான்” என்று ஒரு நீண்ட விளக்கத்தின் மூலம் நியாயப்படுத்தினார். மத்திய அரசின் மூத்த அமைச்சர்களின் அறிக்கைகளால் மிகவும் வலுவாக ஆதரிக்கப்பட்ட ராவத்தின் நேர்காணல், கஷ்மீர் பிரச்சனையைக் கையாள ஒரு புதிய அரசியல்-ராணுவ செயல்திட்ட்ம் உருவாகியுள்ளதைக் குறிப்பாக உணர்த்தியது.அந்த ஜெனரல் ராவத் கூறினார்: “இது ஒரு அசிங்கமான போர்”. “ இங்குதான் புதிய கண்டுபிடிப்புக்கள் உருவாகின்றன.” ”கற்களை வீசும் கூட்டத்தினரிடமிருந்து தனது ஆட்களைப் பாதுகாக்க அந்தக்கூட்ட்த்தினர்மீது துப்பாக்கிச்சூடு நட்த்துவதைத் தவிர்க்க மேஜர் கோகாய் சாதாரண மக்களை மனிதக்கேடயமாகப் பயன்படுத்தும் புதிய உத்தியைக் கண்டுபிடித்தார்.”  

 “எனது படைவீரர்கள் என்ன செய்வது என்று என்னைக் கேட்கும்போது, கொஞ்சம் பொறுத்திருங்கள்: செத்துப்போய்விடுங்கள் என்று நான் கூறவேண்டுமா? நான் அழகான சவப்பெட்டியை ஒரு தேசியக்கொடியுடன் கொண்டுவந்து உங்கள் உடல்களை மரியாதையுடன் அனுப்பிவைப்பேன் என்று  அவர்களின் தளபதி என்ற முறையில் அவர்களிடம் நான்  கூறவேண்டுமா?” உண்மையில் துப்பாக்கிகளையோ, வெடிகுண்டுகளையோ பயன்படுத்தாத இந்தநாட்டின் குடிமக்களை எதிரிகளாக எவ்வாறு கையாள்வது என்ற சிக்கலில் ராணுவம் இருந்தது. அவர் கூறினார்:” உண்மையில் இந்த மக்கள் எங்கள்மீது துப்பாக்கிகளையோ எறிகுண்டுகளையோ பயன்படுத்தி யிருக்கவேண்டும் என்று நான் விரும்பினேன். அப்படிச் செய்திருந்தால் நான் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். அதன்பிறகு நான் என்ன செய்யவேண்டுமோ.........” என்று முடிவுபெறாத வாக்கியத்தைக் கூறினார். ஆனால், அது அவர் என்ன நினைக்கிறார் என்பதைத் திகிலூட்டும்வகையில் வெளிப்படையாகத் தெரிவித்தது. எந்தவிதமான கட்டமைப்பும் இல்லாத, வழக்கத்துக்கு மாறான எதிரிகளாகக் கிளர்ச்சியில் ஈடுபடும் மக்களைக் கையாளும்போது அவர் தனது ராணுவத்தின் உணர்வுகளையும் சிந்திக்கவேண்டியிருந்த்து. “அதுதான் எனது வேலை” என்றார் அவர். “ நான் எப்போதும் எனது வீரர்களிடம் கூறுவேன், ‘விஷயங்கள் தவறாகப் போகலாம்: ஆனால் அப்படித் தவறாகப் போகும்போது, நீங்கள் தவறான நோக்கத்துக்குச் சென்றுவிடக்கூடாது. அங்கு நான் இருப்பேன்.”என்றார். ஜெனரல் ராவத் கோகாய் எதைச்செய்தாரோ அதற்கு முழுவதும் ஆதரவாக இருந்தார்.

டயரின் புத்தம்புது வழிகள்

  டயரும்கூட கிளர்ச்சியில் ஈடுபட்ட மக்களை எதிர்கொண்டான். ஒழுங்கை நிலைநாட்டுவதும், அரசின் அதிகாரத்தை நிலைநிறுத்துவதும் அவனது முழுமுதற்கடமையாக இருந்த்து. நாட்டின் பிற பகுதிகளைப்போலவே அமிர்தசரஸிலும் ரௌலட் சட்ட்த்துக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றன. ஆனால், முக்கியமான தலைவர்களான சத்யபாலும், சைஃபுதீன் கட்ச்லேவும் கைது செய்யப்பட்டு பஞ்சாப்பிலிருந்து வெளியேற்றப் பட்டபிறகு நிகழ்வுகள் மோசமடைந்தன. பல்வேறு இடங்களிலும் கூட்டங்கள் கூடின: துருப்புக்கள்மீது கற்களை வீசின. அப்போது துருப்புக்கள் துப்பாக்கிகளால் சுட்டன. 12பேர் கொல்லப்பட்டார்கள். மாலையில் பலகட்டடங்களுக்கு கூட்டம் தீ வைத்தது. ஐந்து ஐரோப்பியர்கள் அடித்துக்கொல்லப்பட்டார்கள். டாக்டரான ஒரு ஆங்கிலப்பெண் இறந்ததாக கருதி விடப்பட்டார். பின்னர் அவர் மருத்துவமனையில் பிழைத்துக் கொண்டார். இரண்டு நாட்களுக்குப்பிறகு, பைசாகி திருவிழாவுக்காக ஜாலியன்வாலாபாக்கில் மக்கள் கூடியபோது அமிர்தசரஸ் வந்த டயர், பொதுமக்கள் கூடும் எல்லாக்கூட்டங்களும் சட்டத்துக்குப் புறம்பானவை என அறிவித்தான். அவர்களுக்கு எடுத்துக்காட்டாக அமையக்கூடிய வித்த்தில் ஒரு பாட்த்தைக் கற்பிக்கவும் முடிவு செய்தான்.

 டயரும்கூட பஞ்சாப்பில் பிரிட்டிஷ் ஆயுதப்படைகளின் அதிகாரத்தை நிலை நாட்ட புத்தம்புது வழிகளைக் கண்டுபிடித்தான். கலகம் நடக்கும் இடங்களுக்கு போலீசை அனுப்புவதற்குப் பதிலாக தரைப்படையை அனுப்பும் இராணுவச்சட்டம் பிறப்பிக்கப்பட்ட்து. கூட்டு விசாரணைகள் நடத்தப்பட்டன: நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு மரணதண்ட்னை விதிக்கப்பட்டது. அந்த நடைமுறை நிறுத்தப்படுவத்ற்குமுன் அவர்களில் 18பேர் பொதுஇடத்தில் தூக்கிலிடப்பட்டார்கள். ஊரடங்குச்சட்ட மீறலுக்கு மிகவும்பொதுவான தண்டனையாக பொதுஇடத்தில் கசையடி கொடுப்பது இருந்தது. ஆனால், டயரின் மிகவும்கொடூரமான கண்டுபிடிப்பாக, ஆங்கிலப்பெண் டாக்டர் ஷெர்வுட் அடிக்கப்பட்ட தெருவிலுள்ள சந்து ஒன்றை தரையில் தவழ்ந்து கடந்துசெல்வதாக இருந்தது. அந்த்த்தெருவைக் கடந்து செல்ல விரும்புவோர் – அங்கேயே குடியிருப்பவர்களாக இருந்தாலும்கூட- தங்கள் வயிறு தரையில் படுமாறு நான்கு கால்களில் தவழ்வதுபோல தவழ்ந்துசெல்ல பணிக்கப்பட்டார்கள். அப்போது படைவீரர்கள் அவர்களை உதைத்தார்கள்: துப்பாக்கிமுனையில் அழுத்தித் தள்ளினார்கள். டயர் தனது செயலை விச்சித்திரமான உடலசைவுடன் கீழ்த்திசை அறிவோடு விளக்கினான்: “அந்தத்தெரு ஒரு புனித இடமாகக் கருதப்படவேண்டும்:” ”கீழை நாடுகளில் புனிதத்தலங்களை அங்கப்பிரதட்சிணம் செய்வதுபோலின்றி வேறுவகையில் கடந்துசெல்ல முடியுமா?” ஒரு ராணுவத்தினன் என்ற முறையில் அந்த மாகாணம் முழுவதிலும் ஒரு நன்னட்த்தை விதியை உருவாக்குவதுதான் தன்னுடைய வேலை என்பதில் டயர் தெளிவாக இருந்தான். “இவர்கள் கலகக்காரர்கள்: இவர்களை நான் கைகளில் உறைகளை அணிந்து உபசரிக்க முடியாது. ஆம். பஞ்சாப் முழுவதும் அவர்களது மன்வுறுதியை மட்டுப்படுத்த நான் விரும்பினேன். கலகக்காரர்களின் நெஞ்சுரத்தை சீர்குலைக்க.” அன்றைய நாளின் அவனது நடவடிக்கைகள் மக்களின்மீது நீடித்து நிலைக்கும் விளைவுகளை ஏற்படுத்துவதக அமையவேண்டும் என்ற தேவையையும் அவன் தனது சிந்தனையில் கொண்டிருந்தான். “கூட்டத்தை வெறுமனே கலைப்பது மட்டும் போதுமானதல்ல. நான் அவர்களை சிறுது நேரம் கலைக்கலாம்: பிறகு அவர்கள் அனைவரும் திரும்ப வருவார்கள். என்னைப் பார்த்து சிரிப்பார்கள். அவ்வாறு அவர்களை சிறிதுநேரம் மட்டும் கலைப்பது என்னை நானே முட்டாளாக்கிக் கொள்வதாகும் என்று நான் கருதினேன்.” அங்கு தேவைப்பட்டது என்னவென்றால் அரசின் முழுஅதிகாரத்தை நிலை நிறுத்துவது மட்டுமே”.

 ஜெனரல் ராவத்தும்கூட அமைதியாக இருக்கும் இயல்புள்ள, படைத்துறை சாராத மக்கள் கூட்ட்த்தின்மீது ராணுவத்தின் அதிகாரத்தைத் தொடர்ந்து பராமரிப்பதுபற்றி ஒளிவுமறைவற்றவராக இருந்தார். “எதிராளிகள் உங்களைக்கண்டு பயப்படவேண்டும்: அதே நேரத்தில் உங்கள் மக்களும் உங்களிடம் பயம்கொண்டிருக்கவேண்டும்.”நாம் ஒரு நேசபூர்வமான ராணுவம். ஆனால், சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட நாம் அழைக்கப்படும்போது மக்கள் நம்மைக்கண்டு பயப்படவேண்டும்.” எனவே, வன்முறைக்கும்பலைக் கையாளும்போது எதிர்காலத்தை மனதில்கொண்டு புதுப்புது வழிமுறை களைக் கண்டுபிடிக்கவேண்டும். “ நாளை அன்ந்த்நாக்-கில் தேர்தல்கள் நடைபெறவேண்டும். இதுபோன்ற வன்முறை நிகழ்வுகள் நடைபெறக்கூடும். உதவிகோரும் அழைப்புக்களுக்கு ராணுவம் செவிசாய்க்காவிட்டால், நாம் பாதுகாக்கும் மக்களுக்கும், காவல்துறைக்கும், ராணுவத்துக்கும் இடையேயான நம்பிக்கை சீர்குலைந்துவிடும். அவ்வாறு நடைபெற நான் அனுமதிக்கமாட்டேன்.”

  ஒருதேசத்தின் ராணுவம் தனது அதிகாரத்தை நிலைநாட்ட அதைக்கண்டு, அதன் சொந்த மக்களே பயப்படவேண்டும் என்று எப்போது நம்பத்துவங்குகிறது?

ஆளுநர் மைக்கேல் ஓ’ட்வையர் தலைமையிலான பிரிட்டிஷ் அதிகாரிகள் காங்கிரஸ் தலைவர்களால் 1857லிருந்து காணபடாத அளவுக்கு பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக இந்த நாடுமுழுவதும் மிகப்பெரும் சட்ட ஒழுங்கு சீர்குலைவை ஏற்படுத்த மாபெரும்சதி உருவாக்கப்பட்டுள்ளது என நம்பியதால் ஆத்திரம்கொண்டு தேவையற்றவகையில் ஜாலியன்வாலாபாக் படுகொலைகளை நிகழ்த்தினார்கள் என இன்றும்கூட பெரும்பான்மையான இந்தியர்கள் நம்புகிறார்கள். இந்தியாவிலிருந்த ஆளுநர் ஓ’ட்வையரும், மற்ற மூத்த அதிகாரிகளும்கூட “பஞ்சாப்பின் பாதுகாவலன்” என அழைத்து டயரை முழுமையாக ஆதரித்தார்கள். டயர் எடுத்த கொடூரமானநடவடிக்கைகள் பற்றி பிரிட்டனின் அரசியல் எதிர்வினைகள் ஓரளவு அறச்சிந்தனை கொண்டவை களாகவே இருந்தன. இந்திய தேசியவாதிகள்மீது அன்புகொண்டிராதவரும், போரின் செயலாளருமான வின்ஸ்டன் சர்ச்சில் இத்தகைய நெறியற்ற, தேவையற்ற வன்முறைகளைக் கண்டு அருவருப்படைந்தார். இது ஒரு ‘கோரமான நிகழ்வு’ என்று அவர் கூறினார். ‘தீயவை நிகழப்போவதன் அறிகுறியாகவும், தனிமைப்பட்டுப்போவதுமான ஒரு நிகழ்ச்சி இது’ என்றார். அஸ்கொயித் கூறினார்: ”நமது ஒட்டுமொத்த வரலாற்றிலும் இது மிகவும் மோசமான அட்டூழியம்” இந்தியாவின் அரசு செயலாளராக இருந்த எட்வின் மாண்டாகு ஒரு விசாரணைக்குழுவை அமைத்தார். அது சிலமாதங்களுக்குப் பின் “தனது கடமையைப்பற்றி தவறான கருத்துக்கள் கொண்டிருந்ததாக’ டயருக்குக் கண்டனம் தெரிவித்தது. அவனது ‘தவழ்ந்துசெல்லும்’ உத்தரவு ‘அவமானப்படுத்தும் ஒரு நடவடிக்கை’ என்றும், அது, குற்றவாளிகளைப் போலவே அப்பாவிகளையும் தண்டித்தது’ அதன்மூலம் ‘கசப்புணர்வுகளுக்கும், இனம்சார்ந்த் தவறான உணர்வுகளுக்கும்’ காரணமானது என்றும் குறிப்பிட்டது. ஆனால், ஒட்டுமொத்த ஏகாதிபத்தியவாதிகளும், இந்தியாவோடு தொடர்பு களைக் கொண்டிருந்தவர்களும் டயர் பிரிட்டனுக்குத் திரும்பிவந்தபோது தொண்டைகிழிய அவனுக்கு ஆதரவளித்து அவனைப்போற்றிப்பாராட்டியதோடு அந்தநாட்களில் சிறிய தொகையாக இல்லாத 26,000 பவுண்டுகளை அவனுக்காகத் திரட்டினார்கள். உண்மையில் கொஞ்சகாலம் டயர் பிரிட்டனில் ஒரு தேசிய கதாநாயகனாக ஆனான்.

HAR TIED IN A JEEP 350அரசியலையும் ராணுவத்தையும் கலப்பது

 மேஜர்கோகாயின் பிரச்சனையில் ராணுவம் ஒரு விசாரணை நீதிமன்றத்தை அமைத்தபோதிலும், அவரது நோக்கத்தை மிகவும் அழுத்தமாக ஆதரித்து அவரைக் காப்பாற்றியது அரசியல்தலைமைதான். பாதுகாப்புத்துறை அமைசர் அருண்ஜெட்லி, ‘போர் போன்ற ஒரு சூழல்’ அங்கு இருக்கும்போது ராணுவ அதிகாரிகள் தங்கள் சொந்த முடிவுகளை எடுக்க அனுமதிக்கப் படவேண்டும்’ என்றார். வெங்கைய நாயுடுவோ அங்கு ஒரு அசிங்கமான போர் நடந்துகொண்டிருக்கிறது என்ற ஜெனரல் ராவத்தின் கருத்துக்களை ஒட்டுமொத்தமாக ஏற்றுக்கொண்டார். ராஜ்நாத் சிங் ஒருபடி மேலேசென்று ‘கஷ்மீர் பிரச்சனைகளுக்கு ‘ஒரு நிரந்தரமான தீர்வு காண்பதை உறுதிப்படுத்த ஒரு புதிய உத்தி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது’  என்று சூசகமாக்க் குறிப்பிட்டார். மேஜர் கோகாய், அவர்மீதான விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே,சுதந்திர இந்தியாவின் ஆயுதப்படை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதவகையில் பொதுஊடகங்களில் தனது செயல்பாடுகளை நியாயப் படுத்த அனுமதிக்கப்பட்டதுமட்டுமல்ல ஊக்குவிக்கவும்பட்டார். மறைந்துவரும் தலைமுறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருசில ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள் மட்டும், ஒரு தொழில்முறையான ராணுவத்தின் இத்தகைய வெறிகொண்ட நடத்தைகளைப்பற்றிய தங்கள் அதிர்ச்சியை வெளியிட்டார்கள். அவர்களில் மிகவும் முக்கியமானவரான லெப்டினெண்ட் ஜெனரல் ஹெச்.எஸ்.பனாக் மேஜர் கோகாயின் செயல் ‘முறைகேடானதும், மனிதத்தன்மையற்றதும்’ எனவும், ‘ராணுவ ஜீப்பின் முன்பக்கத்தில் கட்டிவைக்கப்பட்ட தர்-ன் பிம்பம், வியட்நாமின் நாபாம் பெண்ணின் பிம்பத்தைப்போல் கஷ்மீரில் உள்ள இந்திய ராணுவத்தின் வடிவத்தை விளக்குகிறது’ எனவும் கூறினார். ஆனால் இத்தகைய விவேகமான பகுத்தறியும் குரல்கள் அரசியலில் சிரிப்பூட்டும் தலைவர்களின் நாட்டுப்பற்றுக் கூச்சல்களில் மூழ்கடிக்கப்பட்டன.

  இந்தநிகழ்வுகள் ஒருபக்கம் ராணுவத்துக்கும், அரசியல் குடிமைப்பிரிவுக்கும் இடையேயான உறவுகளிலும், மறுபக்கம் சமூகத்துக்குமான உறவுகளிலும் விரைவில் நிகழவுள்ள மாற்றத்தைக் குறிப்பிட்டுக்காட்டுவனவாக உள்ளன. கட்டாய ராணுவ சேவை இல்லாத ஒரு நாட்டில், கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகளாக, இந்தியாவின் ஆயுதப்படைகள் உறுதியாக மக்கள் பிரதிநிதி களின் கட்டுப்பாட்டிலும், அரசியலுக்கு அப்பாற்பட்டும் வைக்கப்பட்டிருந்தது 1971 வெற்றி போன்ற  தேசிய ராணுவத்தின் சேவைகள் மக்களால் கொண்டாடப்பட்ட நினைவுகளைக் கொண்டிருந்தன. மிக அண்மைக்காலம் வரை ஓய்வுபெற்ற ராணுவத்தளபதிகள் அரசியலில் ஒருபோதும் நுழையவில்லை. இது இந்த உலகிலுள்ள எல்லா ஜனநாயகத்திலும் தனிப்பட்ட கவனத்துக்குரியதாக இருந்த்து.

  இந்தியா தனது சொந்த தேசிய எல்லையில் மிகநீண்டகாலமாக, மிகவும் விரிவான கிளர்ச்சிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதைத்தான் அருண்ஜெட்லி, ‘போர் போன்ற ஒரு சூழல்’ என்று சுற்றிவளைத்து பொருள் கொள்கிறார். இந்திய ஆட்சியாளர்கள் இதுவரை வெற்றிகரமாக எதிர்கொண்ட பிரச்சனையே, ராணுவத்தலைமைகள் அரசியல் முடிவுகளை எடுக்க அனுமதிக்காமல், அவர்களை உள்ளூர் அமைதியின்மையை எதிர்கொள்ள ராணுவத்தை எவ்வாறு நிலையாக நிறுத்திவைத்த்து என்பதுதான். இந்தச்செயல்பாட்டை பாரபட்சமின்றி நடுநிலையாக உற்றுநோக்குபவர்கள் அரசியல் மற்றும் ராணுவத்தலைமைகள் இரண்டுமே கடந்த காலத்தில்மிகவும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார்கள் என்பதை ஒப்புக்கொள்வார்கள்

  அந்தச்சூழல் இப்போது மாறிவருவதாகத் தோன்றுகிறது ஒவுபெற்ற ராணுவ அதிகாரிகள் அரசியல் கட்சிகளில் சேருமாறு அழைக்கப்படுகிறார்கள். அவர்களும் தேர்தல்களில் நிற்கிறார்கள்: அமைச்சர்களாகவும் ஆகிறார்கள். நாட்டின் எல்லைகளுக்கு வெளியேயும், உள்ளேயுமான் ராணுவத்தின் வெற்றிகள் மிகவும் பிரம்மிக்கத்தக்கவகையிலும், ஆளும்கட்சியின் மட்டுமீறிய தேசியக்கொள்கைகளுக்கு வலுவூட்டும் வகையிலும் உயர்த்திக் காட்டப்படுகின்றன. பணியில் உள்ள அதிகாரிகள் பொது அரங்குகளில் தோன்ற ஊக்கமளிக்கப்பட்டு அரசியல் வழிமுறைகளை எதிரொலிக்கிறார்கள். இவ்வாறு அனுமதிப்பது ஆயுதப்படைகளுக்கு சமுதாயத்தில் அவர்களுக்குரிய கௌரவமான இடத்தை அளிப்பதற்காக என்று எங்களிடம் கூறப்பட்டது! தனிப்பட்ட கௌரவமான இடம் என்பதற்கும், ஆயுதம்தாங்கிய வன்முறைகளைப் பயன்படுத்துவதில் மிகப்பெருமளவுக்கு மேம்பட்ட நிலையில் உள்ள அரசின் ஒருபிரிவுக்கு தண்டிப்பதற்கான அதிகாரத்தை அளிப்பது என்பதற்கும் இடையே மிகச்சிறிய இடைவெளிதான் உள்ளது ஒரு தேசத்தின் ராணுவம் தன்னுடைய அதிகாரத்தைப் பாதுகாக்க  தனது சொந்த மக்களே தன்னைக்கண்டு அஞ்சவேண்டும் என்று எப்போது நம்புகிறது?

 ஜெனரல் ராவத்தின் உள்நோக்கம் டயரின் உள்நோக்கத்தைப் போன்றதே என்று யூகிப்பது சரியல்ல. ஓரளவுக்கு அவர்களது வார்த்தைகள் ஒத்த தன்மையைக் கொண்டுள்ளன இந்திய ராணுவம் நிரந்தரமாக அந்தப்பகுதிகளில் ’ஆயுதப்படைகளின் சிறப்பு அதிகாரங்கள் சட்ட்த்தின் (Armed Forces Special Powers Act )கீழ் நிறுத்தப்பட்டிருப்பது ’ஒரு ஆக்கிரமிப்புப்படை தான் வெற்றிகொண்டு கைப்பற்றிய ஒரு காலனியில் இருப்பதுபோல்’ உள்ளது. இந்த சூழ்நிலையில் இந்தியா கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு எடுத்துக்காட்டாக இஸ்ரேல் அடிக்கடி சுட்டிக்காட்டப் படுகிறது.-குறிப்பாக தொல்லை தருவதில். இஸ்ரேல் என்பது மக்கள் பெருமளவுக்கு வசிக்காத ஓரிட்த்துக்குச்சென்று நிலையாக்க் குடியிருக்கும் ஒரு காலனி. அது பாலஸ்தீனியர்களை பகையுணர்வு கொண்டவர்களாக, கலக்க்காரர்களாகக் கருதி, அவர்கள் அடக்கப்பட்டு, தனியாகப் ப்ரித்துவைக்கப்படவேண்டியவர்கள் என்றும் கருதுகிறது. அதேபோன்ற உறவுகளைத்தான் கஷ்மீர் அல்லது மணிப்பூர் அல்லது நாகலாந்து மக்களிடமும் கொண்டிருக்கவேண்டும் என்று இந்தியாவின் இன்றைய அரசியல் தலைவர்களும் நம்புகிறார்களா?

  நாம் ஒரு நிலச்சரிவிலிருந்து நழுவிவிடும் முனையை ஒரு நாடு என்ற முறையில் இன்னும் அடைந்துவிடவில்லை என்று நம்புவோம். இல்லாவிட்டால், நாம் இன்று கஷ்மீரில் கண்டுகொண்டிருக்கும் ஜெனரல் டயரின் தருணங்கள் ஒரு தளபதி அயூப்கானின் வருகையின் முன்னறிவிப்பு என்று நிரூபணம் ஆகிவிடும். அல்லது அது யாகூப் கானா? அல்லது ஜியா-உள்-ஹக்கா? இவர்களில் யார் உதாரண புருஷராக தேர்வு செய்யபடுவார்?

நன்றி: THE WIRE 22.5.2017        

Pin It