டிரம்ப்ட் தந்த நெருக்கடியால் உங்கள் சபாஷ் நாயுடு படபடப்பு ... அடச்சே படப்பிடிப்பு நின்று போய்விட்டதால் வேற வேலை எதுவுமே இல்லாமல் திடீரென்று டிவிட்டரில் புரட்சி செய்ய ஆரம்பித்து விட்டீர்கள்... எங்களுக்கு அப்படியே பயந்து பயந்து வந்திடுச்சு... எப்பாடு பட்டாவது ஒரு ஆஸ்கர் வாங்கி உங்களை ஹாலிவுட் பக்கம் அனுப்பலாமுன்னு பார்த்தா வெள்ளக்காரனுக விவரமானவனுக... உங்களை ஒதுக்கியே வைக்கறானுக...

kamal 254அப்பறம் கவுதமி மோடியை சந்திச்சுட்டு வந்தாலும் வந்தாங்க... திடீரென்று உங்க சமூக அக்கறை பூனைக்குட்டி வெளியே வந்துடுச்சு... அறிவுரை சொல்றேன், கருத்து சொல்றேன் அப்படிங்கற பெயரில் உங்க டிவிட்டர் பதிவுகளை ஏற்கனவே கோனார் தமிழ் உரை உதவியோடு படித்துப் பயன்பெறும் இந்த அரிய வேளையில், ஆசிரியர் மற்றும் எங்கள் திராவிடர் சமூகத்துக்கு நீங்க சொன்ன அறிவுரை அடடா புல்லரிக்குது...

மக்களுக்கு சேவை செய்வது பற்றி நீங்க வகுப்பெடுக்கற அளவுக்கு திராவிடர் சமூகம் இல்லீங்கோ... கருப்பு சட்டையைப் போட்டுட்டு நாத்திகம் பேசினால் சில தடவை திடலில் பேசிவிட்டால், அறிவுரை சொல்றேங்க பெயரில் உங்க உளறல்களை கேட்டுட்டு இருப்போமுன்னு நினைச்சுட்டீங்க போல....

பெரியாரின் நாத்திகம் மக்களுக்கானது. உங்களை மாதிரி அக்கிரகாரத்து நாத்திகங்கள் உங்கள் அறிவை வெளிக்காட்டிக் கொள்ளும் முயற்சியே என்பதை நிணைவில் கொள்ளுங்கள் கமல்...

உங்கள் ஆரிய இனத்தின் குள்ளநரி வேலை என்பது உங்கள் எண்ணங்களை பொதுப்புத்தியாக மாற்ற நினைக்கும் அற்ப புத்தி... அதற்கு கடவுள் பின்னால் ஒளிந்த உங்க முன்னோர்கள் வழியில் கணினி பின்னால் ஒளிந்து சித்து விளையாட்டைத் தொடங்கியுள்ளீர்கள்... இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள் திராவிடர் இயக்கங்கள் கணினி பின்னால் மட்டும் கூவும் ஒயிட் காலர் புரட்சியாளர்கள் இல்லை கமல்!

ஊர் வலியை தன் வலியாகப் பார்ப்பது எங்கள் பாணி....
உங்கள் வலியை ஊர் வலியாக மாற்ற நிணைப்பது அக்கிரகாரத்து பாணி...

பொதுப் புத்தியை உருவாக்கி அதற்குப் பின்னால் ஒளிந்து கொண்டு பிறகு, அதைக் காசாக்கும் உங்கள் பஞ்ச தந்திரங்கள் இங்கே சொல்லாது.. உங்கள் விஸ்வரூபங்கள் இங்கே செல்லாது... நாட்டை விட்டு ஓடி விடுங்கள்...

ஏனென்றால் நீங்கள் உத்தம வில்லன்
நாங்கள் வில்லாதி வில்லன்கள்....

பி.கு- சிங்கம் 3 படத்திற்காக நீங்கள் ஆற்றிய கலைச்சேவையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை நன்றி....

- அ.ப.சிவா

Pin It