Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

கீற்று படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

Enter your email address:

Keetru RSS Feed

கடைசி பதிவேற்றம்:

  • வெள்ளிக்கிழமை, 23 ஜூன் 2017, 14:58:16.

கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு 7வது முறையாக சிறந்த பாடலாசிரியருக்குக்கான தேசிய விருது மத்திய அரசால் கொடுக்கப்பட்டிருக்கின்றது. வைரமுத்து வழக்கம் போல ‘இது தமிழுக்குக் கிடைத்த பெருமை’ என்று பெருமையோடு சொல்லியிருக்கின்றார். நம்மால்தான் வைரமுத்து அவர்களோடு அந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள முடியவில்லை. காரணம் அவரின் ஆத்ம நண்பர் தருண்விஜய் அவர்கள். ஆனால் வைரமுத்து அவர்கள் தருண்விஜயின் ‘கருப்பு’ கருத்துப் பற்றி எதுவும் இதுவரை கருத்துச் சொன்னதாகத் தெரியவில்லை. ஒருவேளை அது அவ்வளவு முக்கியத்துவமற்ற ஒன்றாக அவர் நினைத்திருக்கலாம். அவரைப் பொருத்தவரை லட்சக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு, பெண்களின் உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை ஒவ்வொரு உறுப்பாக ரத்தமும், சதையுமாகப் பிய்த்து எடுத்து அவர் எழுதும் ‘போர்னோ’ திரைபாடல்களில்தான் தமிழுக்கு உண்மையான பெருமை உள்ளது என்று நினைக்கின்றார். அவர் எழுத வந்த நாள்முதல் இன்றுவரை தமிழ்ச் சமூகம் பெண்களின் மீது வைத்திருக்கும் அருவருக்கத்தக்க மதிப்பீடுகளில் இருந்து கொஞ்சம் கூட தன்னை விலக்கிக்கொண்டவர் கிடையாது. அரிப்பெடுத்த ஆண்களுக்கு தீனி போட்டு வளர்த்து விட்டதுதான் அவர் அதிகபட்சமாக தமிழுக்குச் சேர்த்த பெருமை.

Vairamuthu Felicitating Tarun Vijayவைரமுத்து மட்டும் அல்ல, பெரும்பாலான திரைப்பட பாடலாசியர்கள் இந்த ரகத்தைச் சேர்ந்தவர்கள் தான். ஆனால் அவர்களிடமிருந்து வைரமுத்து கொஞ்சம் வேறுபட்டவர். எப்படி என்றால் மற்றவர்கள் காசுக்காக விபச்சாரம் செய்தாலும், தன்னளவில் நேர்மையைக் கடைபிடிப்பவர்கள். பணம் கிடைக்கும் என்பதற்காக எந்த எல்லைக்கும் போகும் அற்ப செயலைச் செய்யாதவர்கள். ஆனால் வைரமுத்து அவர்கள் பணத்திற்காகவும், புகழுக்காகவும் எந்த எல்லைக்கும் செல்லத் தயங்காதவர். அவர் பெருமையாக நினைப்பதாய் சொல்லும் தமிழையும் சேர்த்தே விபச்சாரத்திற்குத் தள்ள நினைப்பவர். நம்மைப் பொருத்தவரை அவர் வாங்கிய தேசிய விருதுகளால் தான் தமிழுக்குப் பெருமை என்றால் அந்தத் தமிழ் இருப்பதைவிட அழிந்து போவதே நல்லது.

 இந்தியா முழுவதும் பல எழுத்தாளர்கள் மோடி அரசு பதவி ஏற்றதில் இருந்து தலித்துகள், சிறுபான்மையின மக்கள், எழுத்தாளர்கள் போன்றவர்களுக்கு எதிரான காவிப் பயங்கரவாதிகளின் தாக்குதல் செயலுக்கு கண்டனம் தெரிவித்து தனது விருதுகளை திருப்பிக் கொடுத்தபோது, இந்தப் கவிப்பேரரசு அதற்குக் காரணமான ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தைச் சேர்ந்த தருண்விஜயை அழைத்து வந்து விழா எடுத்துக் கொண்டு இருந்தார். தமிழகத்தில் உள்ள பல்வேறு முற்போக்கு அமைப்புகள் வைரமுத்துவின் ஈனத்தனத்தை அப்போதே கடுமையாக கண்டனம் செய்தன. ஆனால் அதைப் பற்றி வைரமுத்து அவர்கள் அலட்டிக் கொள்ளவில்லை. காரணம் அவர் விதை விதைத்துக் கொண்டிருந்தார். அவருக்கு நிச்சயம் தெரியும், இந்த விதை நாளை நமக்கு நல்ல பலனைத் தரும் என்று. அவர் நினைத்தது போலவே அவருக்கு நல்ல பலனை இப்போது அது கொடுத்துவிட்டது.

 அவருக்கு மதவாதம், சாதியவாதம் போன்றவற்றைப் பற்றி எல்லாம் பெரிய கருத்து எப்போதுமே இருந்தது கிடையாது. திமுக மேடையில் இருந்ததால் அவ்வபோது தனது இருந்தலைக் காட்டிக்கொள்வதற்காக சில முற்போக்கு முத்துக்களை உதிர்த்துவிடுவார். எப்படி கதையின் போக்குக்கு ஏற்ப பாடல்களை எழுதுகின்றாரோ, அதே போலத்தான் எந்த மேடைக்கு என்ன தேவையோ அந்த மேடைக்கு அதைப் பேசி ‘கவர்’ வாங்கி விடுவார். அவரின் இந்தக் குணம் தான் தருண் விஜயை தாஜா செய்ய வைத்தது. ‘சமஸ்கிருதமே இந்தியாவின் முதன்மையான மொழி, இந்தியன் என்ற உணர்வே சமஸ்கிருதத்தில் தான் தொக்கி நிற்கின்றது. பிறப்பு முதல் இறப்புவரை அனைத்திற்கும் சமஸ்கிருதம் தேவை. மேலும் அரசின் உயர் பதவிகளைப் பெறுவதற்கு இந்தியாவில் முன்பு நிலவிய மாதிரி சமஸ்கிருதத்தைக் கொண்டுவர வேண்டும்’ என்றெல்லாம் எழுதிய ஆர்.எஸ்.எஸ் தருண்விஜயை பெரியார் பிறந்த மண்ணில் அழைத்துவந்து தன்னுடைய ‘வெற்றித்தமிழர் பேரவை’ என்ற பஜகோவிந்தம் அமைப்பின் மூலம் விழா எடுத்தார்.

 அக்கரகாரத்தில் குடியிருந்து கொண்டு பூணூல் அணிந்துகொண்டு, பஞ்சகச்சம் கட்டிக்கொண்டு, உச்சிக்குடுமியை ஆட்டிக்கொண்டு, ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் உறுப்பினராக இருந்துகொண்டு, அரை நிர்வாணமாக ஊருக்குள் வெட்கமானமே இல்லாமல் உலாவரும் ஒரு சனாதன பார்ப்பனப் பெருச்சாளி பெரியாரியத்தைப் பற்றி பேசினால், அது எப்படி கொஞ்சம் கூட பொருத்தமற்று இருப்பதோடு, ஏதோ சூழ்ச்சியின் பாற்பட்டு நடத்தப்படும் கபட நாடகம் என நம்மை எண்ண வைக்குமோ, அதை நம்ப மறுக்க வைக்குமோ அதே போலத்தான் தருண்விஜயின் திருவள்ளுவர் மற்றும் தமிழ் மீதான பாசம். வரலாற்றில் தமிழையும், தமிழர்களையும் வேசிமொழி என்றும், குரங்குகள் என்றும் அசிங்கப்படுத்திய அயோக்கியர்கள் திடீரென தமிழையும், திருக்குறளையும் புகழ்வதையும், காசியில் பார்ப்பன பாரதி வாழ்ந்த வீட்டை நினைவுச் சின்னமாக ஆக்கவேண்டும் என்று சொல்பவனையும் சந்தேகக் கண்கொண்டு பார்க்காமல், அவனை அழைத்துவந்து விழா எடுத்து, விருது எல்லாம் கொடுப்பது என்பது, தன் இன மக்களையும், மொழியையும் வைத்து விபசாரம் செய்து பிழைக்கத் தயங்காத வைரமுத்து போன்ற பிழைப்புவாதிகளால் தான் முடியும்.

 வைரமுத்து, தருண்விஜய் ஆர்.எஸ்.எஸ்காரன் என்பதைப் பற்றி கவலைப்படவில்லை. அவன் சமஸ்கிருதத்தைத் தூக்கிப் பிடிக்கும் பார்ப்பன பயங்கரவாதி என்பதைப் பற்றி கவலைப்படவில்லை அவர் கவலை எல்லாம் தேசிய விருதுகளின் மேலேயே இருந்தது. எவனைப் பிடித்தால் டெல்லியில் லாபி செய்ய வசதியாக இருக்கும் என்பதில் தான் அவர் எப்போதும் குறியாக இருந்தார் . அதற்காக தமிழன விரோதிகளுக்கு அவர் தன்னுடைய சூத்திர கருநாக்கால் கவிதை பாடினார். எப்படி திருஞான சம்பந்தன் தன்னுடைய பார்ப்பன ஊத்தவாயால் பாடிப் பாடியே திருமரைக் காட்டில் உள்ள கோவில் கதவைத் திறந்தானோ, அதே போல இவர் தருண்விஜயை தன்னுடைய கவிதையால் சொறிந்து, சொறிந்தே தனது 7 வது தேசிய விருதை வாங்கியிருக்கின்றார். இந்த மானங்கெட்ட விருது தமிழுக்கு பெருமை சேர்க்குமாம். வைரமுத்து பேக்கரியை வாங்கிய கதையைக் கேள்விப்பட்டு இன்று தமிழ்நாடே கைகொட்டி சிரித்துக்கொண்டு இருக்கின்றது.

 வைரமுத்துவின் மீது உள்ள காழ்ப்புணர்ச்சியில் நீங்கள் இப்படி அவதூறு பரப்புகின்றீர்கள் என்று சொல்லலாம். தருண்விஜய் “ நாங்கள் நிறவெறியர்களாக இருந்தால் எப்படி தமிழர்கள், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர மக்கள் என இருக்கும் தென்னிந்தியர்களோடு இருப்போம். இந்தியாவிலும் கருப்பர்கள் இருக்கின்றார்கள். எங்களைச் சுற்றிலும் அவர்கள் இருக்கின்றார்கள். நீங்கள் உங்கள் சொந்த நாட்டை மறுக்கிறீர்கள் என்றால் நீங்கள் உங்கள் வம்சாவளியை மறுக்கின்றீர்கள். உங்கள் கலாச்சாரத்தை மறுக்கின்றீர்கள்” என்று சொல்லியபோது இந்தக் கருப்பு வைரமுத்து ஏன் வாய்திறந்து கூட கண்டிக்கவில்லை என்பதால் தான் நாம் அவரைக் கண்டிக்கின்றோம். அவர் ஏன் கண்டிக்க வேண்டும் என்றால், அந்த நாயை அழைத்து வந்து தமிழகத்தில் வைத்து விழா எடுத்துப் பெருமைப்படுத்தி பூரித்து, மகிழ்ந்தது வைரமுத்துதானே. அதனால் அந்த நாய் தமிழர்களை இழிவாகப் பேசினால் அதற்கு வைரமுத்துதான் முதலில் பதில் சொல்ல வேண்டும். இங்கே இருக்கும் பெரியாரிய, மார்க்சிய, அம்பேத்கரிய இயக்கத் தோழர்கள் பார்ப்பன பயங்கரவாதத்திற்கு எதிராக தீவிரமாகப் போராடி, அதை வேரறுக்க முயன்றுகொண்டு இருந்தால் வைரமுத்து போன்ற போர்னோ எழுத்தாளர்கள் அதைத் தவிடுபொடியாக்க, கேவலம் விருது கிடைக்க – காவி பயங்கரவாதிகளை அழைத்துவந்து அவர்களுக்குத் தமிழகத்தில் களம் அமைத்துக் கொடுப்பார்கள்.

 ஒருவகையில் தருண்விஜய் சொன்னது உண்மைதான். அவர் தெளிவாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா என கருப்பர்கள் வாழும் பகுதிகளைக் குறிப்பிட்டுச் சொல்லி இருக்கின்றார். திராவிடர்கள் கருப்பானவர்கள் என்பதையும் அவர்கள் வாழும் பகுதி எது என்பதையும் ஒரு ஆர்.எஸ்.எஸ் பத்திரிக்கையாசிரியனே தான் வாயால் ஒப்புக்கொண்டு இருக்கின்றான். தமிழ்நாட்டில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ். காலிகள் திராவிடம் என்பதெல்லாம் பொய், அப்படி என்ற ஒன்று வரலாற்றில் என்றுமே இருந்தது கிடையாது என உளறித் திரிகையில் அதே ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன பயங்கரவாதப் பட்டறையில் இருந்து வெளிவந்த ஒரு பெரிய குரங்கு அதை ஒப்புக்கொண்டு சான்றளித்துள்ளது. எனவே கருப்பர்கள் எல்லாம் திராவிடர்கள் என்பதும், வெண் குஷ்டம் பிடித்தது போன்று இருக்கும் வெள்ளையர்கள் எல்லாம் ஆரியர்கள் என்பதும், கருப்புத் திராவிடர்களுக்கு புரியவைக்கப்பட்டுள்ளது. ‘எங்களைச் சுற்றி அவர்கள் இருக்கின்றார்கள்’ என்று சொன்னதன் மூலம் இந்த ஆரிய நாய்கள், திராவிடர்களால் சுற்றி வளைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதும், எந்த நேரத்திலும் அட்டாக் செய்ய திராவிடர்கள் தயாராக இருக்கின்றார்கள் என்பது உறுதியாகியிருக்கின்றது. எனவே அதற்காக நாம் தருண்விஜயைக்கு நன்றி சொல்லிக்கொள்வோம். தருண்விஜயின் இனவெறிப் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்காத அவரின் நண்பர் போர்னோ கவிஞர் வைரமுத்துவுக்கு அவர் வாங்கியது விருது அல்ல என்றும், அது பார்ப்பனனின் மலம் என்பதையும் ஒரு கருப்புத் திராவிடனாக பெருமையாக தெரிவித்துக் கொள்வோம்.

- செ.கார்கி

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

0 #1 Manikandan 2017-04-11 23:32
பெரியார் தமிழர்களையும் தமிழையும் காட்டு மிராண்டிகள் மொழி என்று சொன்ன போது பொங்காத கார்க்கி பிஜேபி அல்லது RSS சொல்லாத ஒரு விஷயத்தை கண்ணு காத்து மூக்கு வைத்து கற்பனையாக எதாவுது இப்படி சொல்லி வெறுப்பை வளர்க்கிறார்

வைரமுத்து மாதிரி தமிழ் அறிவு இல்லாத கார்க்கிக்கு அடிப்படை தகுதி கூட இல்லை வைரமுத்துவை விமர்சிக்க
Report to administrator
+1 #2 sridhar 2017-04-12 07:55
https://youtu.be/Qw1KdmQ5ZTc?t=13m7s
Report to administrator
0 #3 M.S.KUMAR 2017-04-12 14:49
ப்ரோனோக்ராப் வைரமுத்து வாங்கின விருது பார்ப்பானின் மலம் !!!!
சாபாசஹ் !!!

சரி அவரு எழுதின எல்லா பாடும் ப்ரோனோ வகையை சார்ந்த தா ??

மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தாள் உலகம் அழியும்

பச்சைக்கிளிகள் தேரோடு பாட்டு குயில்கள் மணியோடு பூலோகம்
பொன்மாலை பொழுது இது ஒரு பொன்மாலை பொழுது
மடை திறந்து பாடும் சிறுகுயில் நான்
புத்தம் புது பூமி வேண்டும் நித்தம் ஒரு வானம் வேண்டும்
சின்ன ஆசை சிறக்கட்டிக ஆசை
நாதம் என் ஜீவனே வா வா என் தேவனே
பூஜைக்காக வாழும் ஜீவன்
பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும்

இப்படி பல பாடல் அவர் தந்து இருக்கிறார்

உங்கள் கூற்றுப்படி ப்ரோனோ சப்ஜெக்ட் தொடாத தமிழ் திரை பாடல் ஆசிரியர் யாருமே இல்லை
உதாரணமாக
கண்ணதாசன்
மணி கொண்ட கரம் ஓன்று அனல் கண்டு வெடிக்கும்
மலர் போன்ற இதழ் இன்று பனி கண்டு துடிக்கும்
புணருதலை அவர் பணியில் கூறி உள்ளார் இதுவம் ப்ரோனோவகை தானே
மாம்பூ மகிழம்பூ மனசுக்கு ஏத்த தாழம்பூ கம்போ கருப்பு கைபடாத தாமரை பூ
மாம்பழம் வாங்குங்க மல்கோவா பழ முங்கோ எல்லாம் வித்து போச்சுங்க இருப்பது இரன்டு தானுங்க
இதுயெல்லாம் ப்ரோனோவகை இல்லையா ?/
வாலி, கங்கை அமரன் என்ற பல திரை பட பாடல் ஆசிரியர்கள் ப்ரோனோ விஷத்தை தொடாமல் இலலை !!!!
சினிமா என்ற கனவு உலகத்தை வசிப்பது உணர்வது அதனுள் வாழ்வது அதனை சுலபம் இலலை
Report to administrator
0 #4 A MAHARAJAN 2017-04-12 17:11
இவர்கள் என்றோ ஆதிக்கம் செலுத்திய பார்பனர்களை, இன்றும் வசை படுவது "செத்த பாம்பை அடிப்பதே safe" என்பதால்தான். வார்தைகளில் குறைந்த பட்ச நாகரீகம் கூட இல்லை.
Report to administrator
+1 #5 மாரிமுத்து 2017-04-12 21:39
வைரமுத்து வாங்கின பாார்ப்பான் விட்டை'னா, ராஜ்முருகன் வாங்கினது பன்னி விட்டையா, மார்க்சிம் கார்க்கி விட்டையா.
Report to administrator
0 #6 Sankaralingam 2017-04-13 12:39
திரு. மணிகண்டன் அவர்களே ! பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று கூறியதை எதற்காக கண்டிக்க வேண்டும். அறிவியல் பூர்மாக சிந்திக்கும் கருத்துக்களையா அது கொண்டிருக்கிறது . இப்பொழுதும் தமிழ் அதே சாதி ரீதியாக மக்களை இழிவு படுத்தும் மற்றும் மூடநம்பிக்கையின ் கருவியாக தானே உள்ளது.

//பிஜேபி அல்லது RSS சொல்லாத ஒரு விஷயத்தை கண்ணு காத்து மூக்கு வைத்து கற்பனையாக எதாவுது இப்படி சொல்லி வெறுப்பை வளர்க்கிறார்// என்று கூறுகிறீர்கள்! அப்படி என்ன விஷயத்தில் கார்க்கி கற்பனை கதையை கூறுகிறார் என்பதனை தெளிவாக கூறினால் மற்றவர்களும் புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.

//வைரமுத்து மாதிரி தமிழ் அறிவு இல்லாத கார்க்கிக்கு அடிப்படை தகுதி கூட இல்லை வைரமுத்துவை விமர்சிக்க//

வைரமுத்துவை அவரின் கவிதையில் குறை உள்ளது என்று கட்டுரை உள்ளது எழுதவில்லை அவரின் செயல்பாடுகளைத் தான் விமர்சனம் செய்துள்ளார் அதற்கு இந்த காட்டுமிராண்டி தமிழ் மொழி அறிவு தேவை இல்லை.
Report to administrator
0 #7 Manikandan 2017-04-14 02:57
Sankaralingam "வரலாற்றில் தமிழையும், தமிழர்களையும் வேசிமொழி என்றும், குரங்குகள் என்றும் அசிங்கப்படுத்தி ய அயோக்கியர்கள்" தமிழர்களை பற்றி யாருமே சொல்லாத ஒரு விஷயத்தை வைத்து கார்க்கி இப்படி கோபப்படுகிறார். .. சரி உங்களை போலவே கார்கியும் பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்னதற்கு ஏதோ ஒரு அறிவியல் காரணம் இருக்கிறது என்றே வைத்துக்கொள்வோம்.

ராமாயணம் நடந்த காலத்தில் (அல்லது எழுதப்பட்ட காலத்தில்) குரங்கில் இருந்து மனிதனாக மாறி கொண்டு இருந்தார்கள் என்பதை அறிவியலாக நீங்கள் ஏன் பார்க்கவில்லை, யாரோ ஒரு ஆங்கிலேயன் சொன்னதை வைத்து கொண்டு மனிதன் குரங்கில் இருந்து தான் வந்தான் என்பதை அறிவியலாக ஏற்கும் நீங்கள் ஏன் ராமாயணத்தை அவ்வாறு ஏற்காமல் பார்ப்பன சதி என்று சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள் ?

பதில் சொல்ல முடியும்மா ? கார்க்கி போன்றவர்கள் எல்லாம் தங்களை முற்போக்குவாதிக ள் என்று கற்பனை செய்து கொண்டு அவர்கள் பேசுவது எல்லாம் ஹிந்து மத வெறுப்பு மற்றும் இந்தியா வெறுப்பு மட்டுமே, வேறு எதுவும் அவர் கருத்தில் இல்லை... இந்த நாடு ஒரு ஜனநாயக நாடாக இருப்பதால் தான் அவரால் இப்படி பேச முடிகிறது, இதே போல் கார்க்கியால் இஸ்லாமிய கடவுள்களை பற்றியோ அல்லது கிறிஸ்துவ கடவுள் பற்றியோ அவதூறாக பேச முடியாது.

கார்க்கி போன்றவர்களின் தாய் நாடான சீனாவில் அவர்கள் நாட்டிற்கு எதிராக இப்படி அவதூறாக பேசினால் இருக்கும் இடம் தெரியாமல் செய்து விடுவார்கள்.

கம்யூனிஸ்ட்களை வெறுப்பதற்கு கார்க்கி போன்ற ஒரு சிலர் போதும், சாதாரண மக்களிடம் இருந்து இந்தியா விரோத கம்யூனிஸ்ட்களை ஓட ஓட விரட்டி விடுவார்கள்.

கம்யூனிசம் பேசும் அனைவருமே இந்தியா விரோதிகள் என்பதற்கு கார்க்கி மேலும் ஒரு உதாரணம்.
Report to administrator
+1 #8 சுப.சோமசுந்தரம் 2017-04-17 10:51
எழுத்து நாகரிகம் இல்லாமல் இவ்வுலகைச் சீர்திருத்த முடியாது தோழரே ! அது நம்மைத் தனிமைப்படுத்தும ். எதிர்க்கருத்து உடையவர்களையும் நம் கருத்தை ஏற்காமலேயே வியக்க வைப்போமே ! 'அவர் செய்த நன்று ஒன்று உள்ளக்கெடும்' என்பதற்கிணங்க திருக்குறளையும் நம் பண்பாட்டையும் எங்கும் உயர்த்திப் பேசிய (உங்கள் கருத்தில் அது அரசியல் என்றாலும் கூட) தருண் விஜய்யின் சமீபத்திய 'நிறம்' பற்றிய கூற்றை ஏதோ சிறு பிழை என விட்டுவிடலாமே. கலை அத்தனையும் 'போர்னோ' என்பது நமது இடதுசாரி சிந்தனைகளிலேயே வறட்டுத்தனமானதா க தோன்றுகிறது. ரசிக்கத் தெரியாத மக்களையா நாம் உருவாக்க விரும்புகிறோம்.
மேலும் இக்கட்டுரையில் தனிமனித வெறுப்பு மேலோங்குவதை உணர முடிகிறது.இதை எதிரணியில் இருந்து நான் பேசவில்லை தோழரே !
Report to administrator
0 #9 கிருஷ்ணன் நல்லபெருமாள் 2017-04-17 23:03
ஐயா கார்க்கி அவர்களுக்கு வணக்கம். மாற்றுக் கருத்தையும் சபை நாகரிகத்துடன் உரைக்கும் வழக்கம் தமிழர் பண்பாடு. திருமறைக்காடு (தற்போது வேதாரண்யம்) கோவில்கதவு திறக்கப் பாடியவர் அப்பர் என்னும் திருநாவுக்கரசர் . (தங்கள் மொழியில் சொன்னால் 'சூத்திரக் கருவாயால்' கவிதை பாடித் திறந்தவர் அப்பர்). கோவில் கதவை அடைக்கப் பாடியவரே திருஞான சம்பந்தராவார். தொன்மத்தில் கூறப்படும் நிகழ்வுகளைக் கூட சரிபார்க்காமல் காழ்ப்புணர்ச்சி யில் கதையையே மாற்றி வசைபாடுவது பரிதாபத்துக்குர ியது. தங்கள் கட்டுரையையே அது கேலிப்பொருளாக்க ிவிடுகின்றது. மரபுவழி 'தமிழன், ஆரியன்' என்று இனத்தூய்மை இன்று காண இயலாவிடினும் கருத்தியலில் வேரூன்றி நிலைத்துவிட்டதை யே தருண் விஜய் கூற்று நிரூபிக்கின்றது . பிறப்பால் ஆரியப் பார்ப்பனராயினும ், உணர்வால் தமிழனாக வாழ்ந்தவர் திருஞானசம்பந்தர ். தமிழ்ஞானசம்பந்த ன், நற்றமிழ்சம்பந்த ன் என்று தன்னையே பதிவிட்டவர். ஆரிய அந்தணர்களுக்கு 'அந்தியுள் மந்திரம் ஐந்தெழுத்தே!' என்று 'காயத்திரி' மந்திரத்தினும் உயர்ந்தது ஐந்தெழுத்தே என்று அறைந்தவர். அவர் காலத்தில் அவரை எதிர்க்கத் துணிவில்லாத ஆரியப் பார்ப்பனர்கள் மறந்தும் திருஞானசம்பந்தர ் பெயரைத் தங்கள் குழந்தைகளுக்கு வைக்க மாட்டார்கள். வரலாறு அறியாமல் வசைபாடுவதால் பயனொன்றும் இல்லை அறிஞரே!
Report to administrator

Add comment


Security code
Refresh